எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 04, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி8 -லீ லகுன் விடுதிகள்(Le Lagon Resort)

எனது பிரயாண முகவரின் ஊடாக இன்னாட்டுப்பயணத்துக்கு செலுத்திய பணத்தில் விமானச்சீட்டு, லீ லகுன் (Le Lagon Resort)விடுதிகளில் தங்குவதற்கான கட்டணமும் அடங்கும். அத்துடன் ஒரு முறை, சுற்றுலா வழிகாட்டி துணையுடன் குளீருட்டப்பட்ட வாகனத்தில் போட்விலாவை அரை நாள் சுற்றி வருவதற்கு இலவச அனுமதிச்சீட்டினையும் தந்தார்கள்( பகுதி2ல் பார்த்தவற்றைச் சொல்லியிருக்கிறேன்). விடுதியில் இருந்து மோட்டார் இல்லாத படகுகளில் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாகச் சவாரி செய்யலாம்.


மேலும் விடுதியில் காலை உணவு இலவசம்(எவ்வளவும் சாப்பிடலாம்). ஆனால் மதியம்,இரவுச் சாப்பாட்டை விடுதியில் சாப்பிட்டால், ஒருவர் சாப்பிட குறைந்தது 25 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவை. ஆனால் வாடகை மகிழுந்தில் நகருக்குச் சென்று நல்ல உணவகத்தில்(உருசியான) சாப்பிட்டு வாடகை மகிழுந்தில் திரும்பி விடுதியிக்கு வந்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம்( மொத்தச் செலவும் அவுஸ்திரெலியா 20 வெள்ளிகளை விட மிகவும் குறைவு). சீனர்களின் உணவகம் போட்விலா நகர்ப்பகுதியில் இருக்கிறது. அங்கே ஒருவருக்கு தரும் சாப்பாடு 2பேர் சாப்பிடக்கூடியதாகவும் மிகவும் உருசியாகவும் இருக்கும்.படத்தில் இருப்பது லீ லகுன் விடுதியில் உள்ள உணவகம்.

வனுவாட்டு மக்கள் செம்பரத்தம் பூவினைக்காதில் அணிவதுண்டு. திருமணம் செய்தவர்கள் வலது காதில் அணிவார்கள். இடது காதில் திருமணம் செய்யாதவர்கள் அணிவார்கள். நான் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அங்கே கட்டிலில் இரண்டு செம்பரத்தம் பூக்களை வைத்திருந்தார்கள்.

கீழே இருப்பவை லீ லகுன் (Le Lagon Resort)விடுதிகளின் மேலதிகப்படங்கள்.


5 comments:

மணியன் said...

அழகான தமிழில் அழகான தீவுகளை அழகான படங்களுடன் பதிந்து வருகிறீர்கள். யாரும் அறிந்திடாத தென்பசிபிக் நாடான வனு-அற்று பற்றிய உங்கள் இடுகைகள் ஒரு தகவற் சுரங்கமாக அமைந்துள்ளது. இவை தமிழ் விக்கிபீடியாவிலும் இடம்பெற வேண்டும்.

Aravinthan said...

நன்றிகள் மணியன்.

Anonymous said...

அழகான படங்கள்...ம்ஹிம் குடுத்து வைத்த பிறவி..

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Aravinthan said...

பக்கத்தில் தானே இருக்கிறது. நீங்களும் சென்று வரலாம் தானே தூயா.