இதற்கு இலவசப்படகில் தான் செல்லவேண்டும்.
படத்தில் தெரிவது மெரிடியன் விடுதிகள்(Le Meridien)ன் ஒருபகுதி
நான் தங்கியிருந்த விடுதி 75 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டதும் பல பயன் தரும் மரங்கள் நிறைந்ததும், பசுபிக் சமுத்திரத்துடன் இணையும் ஆழம் குறைந்த ஏரியான (Lagoon) எரகொரின் (Erakor) ஒரு பக்கத்தில் அமைந்ததுமான Le Lagon Resort ஆகும். 140 விருந்தினர் தங்கும் அறைகள் உடைய இந்த விடுதியில் மேலதிகமாக 4 அறைகள் தண்ணீரின் மேலே அமைந்திருக்கின்றன. யப்பான் நாட்டினைச் சேர்ந்த ஒருவர் இந்த விடுதியின் உரிமையாளர்.
4 comments:
அழகு!
நன்கு அனுபவிக்க வாழ்த்துக்கள்!
வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தரவடிவேல்
விடுதியில் தங்க எவ்வளவு செலவு ஏற்படும் ?
விமானச்சீட்டுடன், 5 நாட்கள் மிகவும் சிறந்த விடுதியிலும் தங்குவதற்கும், அவ்விடுதியில் காலை உணவினை இலவசமாக உண்ணவும், அரை நாள் இலவசமாக போட் விலாவினை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் சுற்றிப்பார்ப்பதற்கு 1300 வெள்ளிக்கு(டொலர்) சீட்டினை வாங்கலாம். றனா(Tanna) என்ற தீவில் தோன்றும் எரிமலையினைப் பார்ப்பதற்கு விமானத்தில் பயணம்செய்ய ஒரு நாளுக்கு 100 வெள்ளிகள் தேவை. ஆடம்பரச் செலவு இல்லாவிடில் 2000 வெள்ளிக்குள் எல்லாவற்றினையும் பார்க்கலாம்(விமானச்சீட்டு உடன்).
விமானச்சீட்டு 700 வெள்ளிக்கும் பெறலாம். ஒரளவு வசதியுடைய விடுதியில் தங்கிக்கொண்டு இடம் பார்க்க 1600க்குள் செலவு செய்யலாம்(வீமானச்சீட்டுடன்).
Post a Comment