எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, July 17, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல் பாதுகாப்பது,பழையகாலத்துப் பாய்கள், கூடைகள் பின்னுவது போன்றவற்றையும் காணலாம். அக்காலத்தில் எவ்வாறு தீ மூட்டினார்கள் என்பதினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

ஒலைகளினால் பாய்கள், உடைகள் செய்வதினை இங்கே காணலாம். இங்குள்ளவர்களும் இவ்வுடைகள் அணிந்தே காட்சியளித்தனர்.

மிருகங்களினைப்பிடிப்பதற்கு உபயோகிக்கும் பொறி.

உணவுகள் பழுதடையாமல் இருப்பதற்கு வாழை இலையில் உணவினை வைத்து, வேறு சில வழிகளையும் உபயோகித்து நிலத்தின் கீழ் புதைத்து 5 வருடங்களின் பின்பும் உணவினைக்கெடாமல் பாதுகாக்கும் முறை.

மிருகங்களினைத்தாக்குவதற்கு உரத்த குரலில் கத்திக்கொண்டு போய் தாக்குவார்கள். சத்தம் கேட்டு விலங்குகள் பயப்படும் என்பதினால் உடையில் மணிகள் அணிந்து ஒடித்தாக்குவார்கள்.

உரத்த குரலில் பாடல்கள் பாடிக்கொண்டு தாக்குவது இவர்களின் வழக்கம்.

அதிகாலத்தில் மனிதமாமிசம் சாப்பிடும் வழக்கம் இங்கே இருந்தது. படிப்படியாகக்குறைந்து 1969ம் ஆண்டு வரை சில இடங்களில் இந்தப்பழக்கம் இருந்தது. தாக்க வரும் மனிதர்களின் நெற்றியினை ஒரே அடியில் பிளப்பார்கள். படத்தில் உள்ளவர் வைத்திருக்கும் அயூதத்தினால் தான் மனிதர்களினை அடிப்பார்கள். அயூதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் வெவ்வேறு பாகத்தைத்( நெற்றி, தோள்பட்டை) தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

ஆதிகாலத்தில் உணவினை சூடாக்கும் முறையினையும் காண்பித்தார்கள்(Making traditional ground ovens(Hungi~Maori)). பிறகு ஒரு கொட்டிலில் எங்களை இருக்கவிட்டு, குடிப்பதற்கு பழக்குளிர்பானமும், உண்ண பழங்களும் தந்தார்கள். நாங்கள் உண்ணும் போது, தற்கால கிற்றரினை ஒருவர் இசை மீட்ட, வேறு சிலர் மூங்கில் தடிகளையும், பழைய போத்தல்களையும் உபயோகித்து வாத்தியங்களாக வாசிக்க, அவர்கள் உரத்த குரலில் அவர்களது மொழிப்பாடல்களினைப் பாடினார்கள்.

5 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பதிவுகள் நன்றாக உள்ளன. அரவிந்தன், பதிவை திரட்டிகளில் இணையுங்கள். அனைவரும் வாசிக்க இலகுவாக இருக்கும்.

மதுவதனன் மௌ.

Anonymous said...

5 வருடங்களா???
எப்படி என அறிந்தீர்களா?

Aravinthan said...

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் மதுவதனன்.

எப்படி என்று கேட்கவில்லை தூயா.

Anonymous said...

எங்கட மூதாதையர்களின் கதைகள் போலக் கிடக்கிறது.

Aravinthan said...

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் வியாசன்