
இங்கு வனுவாட்டு பறவைகள், வாத்துக்கள், கிளிகள், பாம்புகள், மிகவும் அரிதான ஊர்வன, ஆமை போன்றவையுடன் தேங்காய் நண்டினை( Coconut Crabs)யும் காணலாம். பெரிய மரப்பொந்துக்குள் வாழும் இந்த நண்டு தென்னை மரத்தில் ஏறி தேங்காயினை சாப்பிடுவதினால் தேங்காய் நண்டு என அழைக்கப்படும். தனது பற்களால் தேங்காய்ச் சிரட்டையினை உடைத்து தேங்காயினை உண்ணும். வனுவாட்டு மக்களில் பலர் இந்த தேங்காய் நண்டினை விரும்பிச் சாப்பிடுவார்கள். சாப்பிட நல்ல உருசியானது என்று வனுவாட்டில் சந்தித்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.


இந்த தேங்காய் நண்டினை படத்தில் தெரிவது போல நண்டின் முதுகுப்புறத்தில் தூக்கவேண்டும். இல்லையேல் கடித்துவிடும்.


இந்தத் தோட்டத்தில் 100 வருடங்களுக்கு முன்பிருந்த மூதாதையர்களின் கதைகளினை வாசிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக்காலத்தில் கிராமத்தலைவர் வாழ்ந்த வீட்டினையும்(படத்தில் உள்ள கொட்டில் வீடு) இந்தத்தோட்டத்தில் காணலாம். அந்தக்காலத்தில் கிராமத்தலைவர்களுக்கு 5 மனைவிகள் இருந்தார்கள். திருமணத்தின் போது மனைவியின் முன் மேற்பற்கள் இரண்டும் உடைக்கப்படும்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் வனுவாட்டில் இருந்த கதைகளினையும் இத்தோட்டத்தில் காணலாம். மிகவும் அருமையாகக் காணக்கூடிய மரங்களினையும் இங்கே காணலாம். காவாத் தோட்டத்தினையும் இங்கே காணலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல(பகுதி 2) காவா(Kava),மரத்தின் வேரினைக்காச்சி அதில் வரும் சாற்றினைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மேலே இணைத்த படத்தில் உள்ள தேங்காய் நண்டினைத்தூக்கி வைத்திருக்கும் சிறுவனே அப்பொழுது இத்தோட்டத்தினைப்பற்றி பல செய்திகள் சொல்லி விளங்கப்படுத்தினார். இச்சிறுவன் அங்குள்ள மக்கள் வரையும் கோலத்தினை கையினைத்தூக்காமல் தொடர்ந்து வரைந்து காட்டினார்.
வனுவாட்டில் சுற்றுலா இடங்களைக் காண்பிக்கும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் 5ம் வகுப்பு வரை படித்திருப்பார்கள். ஆங்கில, பிரெஞ்சு மொழியில் படித்த இவர்கள் நன்றாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் வாசிக்கவும், பேசவும் தெரிந்துள்ளார்கள்.
9 comments:
வணக்கம் நண்பரே ...வாங்க
வலை உலகத்தில் வந்து கலக்க இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்
தொடர் மீண்டும் தொடர்வதையிட்டு மகிழ்ச்சி :)
நன்றிகள் சின்னக்குட்டி, தூயா
நிங்கள் மிண்டும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவதற்கு என் வாழ்த்துகள் :)
விசித்திரமாக உள்ளது இந்த தேங்காய் நண்டுகள் பற்றிய தகவல்கலும் படங்கலும் மற்றும் அவர்கலது கலாச்சாரமும்.
இப்பொழுது புரிகிறது அதற்கு ஏன் இந்த பெயர் என்று.
came through Thooya's blog
வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஜீவன்.
படங்கள் அருமை, அதிலும் முக்கியமாக அந்த நண்டு மற்றும் வவ்வால் படங்கள்!
உங்கள் கருத்துக்கு நன்றிகள் கயல்விழி
நண்டைப் பார்க்க பயமாக இருக்கிறதே.
பயமாய் இருந்தாலும், அங்குள்ளவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று தேங்காய் நண்டுதான்.
Post a Comment