எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 19, 2013

நியூசிலாந்து 66 -கைக்கோராவில் இருந்து பிக்டன்வரை

கைக்கோரா நகரில் மதிய உணவினை உண்டபின்பு, கிட்டத்தட்ட மதியம் ஒன்றே முக்கால் மணியளவில், அன்று இரவு தங்கும் பிக்டன் நகரை நோக்கிப் பயணித்தோம்.
நியூசிலாந்தின் தெற்கு தீவில் பயணிக்கும் போது அடிக்கடி செம்மறியாடுகளைத் தான் பார்த்திருந்தேன். ஆனால் முதன்முதலாக அழகிய மான்களினைக் கண்டேன். அமெரிக்காவில் பயணிக்கும்போதும் மான்களை அடிக்கடி காணலாம்.
சில நிமிடப்பயணத்தின் முடிவில் மீண்டும் கடற்கரையினூடாகப் பயணித்தோம்.
மாலை 3 அரை மணியளவில் பெலிங்கெம்(Blenheim) நகரினை அடைந்தோம். இங்கே உள்ள வைன் (Wine -திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்படும் குடிவகை) தோட்டத்திற்கு சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். இவ்விடத்தில் பார்க்கக்கூடிய வேறு இடங்கள் இல்லை என்பதினாலும் சிட்னிக்கு வெளியே உள்ள Hunter Valleyயில் ஏற்கனவே பெரிய வைன் தோட்டங்களைப் பார்த்ததினாலும் பிக்டனை நோக்கிப் பயணித்தோம்.
பிக்டன் நகரினை மாலை 4 மணியளவில் அடைந்தோம்.

Thursday, August 15, 2013

நியூசிலாந்து - 65 அழகிய கைக்கோரா நகர்

கைக்கோராவில் உள்ள குன்றின் மேல் ஏறி உயரமான இடத்தில் இருந்து சில தூரம் நடந்து சென்றால் கலங்கரை விளக்கமொன்றினைக்(Light House) காணலாம்.
அந்த உயரமான இடத்தில் இருந்து பார்க்கும்போது கைக்கோரா மிகவும் அழகாக இருந்தது.
உயரமான இடத்தில் இருந்து அழகிய காட்சிகளைக் கண்டு இரசித்தபின்பு மதிய உணவினை உண்ண மீண்டும் கைக்கோரா நகரை நோக்கிப் பயணித்தோம்.
தாய்லாந்து நாட்டு உணவகம் ஒன்றில் மதிய உணவினை உண்டபின்பு அன்று இரவு தங்கும் பிக்டன் நகரை நோக்கிப் பயணித்தோம். கைக்கோராவில் இருந்து பெலிங்கெம்(Blenheim) செல்ல ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் தேவை.
பெலிங்கெமில் இருந்து பிக்டனுக்கு செல்ல 30 நிமிடங்கள் தேவை.