
மேலும் விடுதியில் காலை உணவு இலவசம்(எவ்வளவும் சாப்பிடலாம்). ஆனால் மதியம்,இரவுச் சாப்பாட்டை விடுதியில் சாப்பிட்டால், ஒருவர் சாப்பிட குறைந்தது 25 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவை. ஆனால் வாடகை மகிழுந்தில் நகருக்குச் சென்று நல்ல உணவகத்தில்(உருசியான) சாப்பிட்டு வாடகை மகிழுந்தில் திரும்பி விடுதியிக்கு வந்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம்( மொத்தச் செலவும் அவுஸ்திரெலியா 20 வெள்ளிகளை விட மிகவும் குறைவு). சீனர்களின் உணவகம் போட்விலா நகர்ப்பகுதியில் இருக்கிறது. அங்கே ஒருவருக்கு தரும் சாப்பாடு 2பேர் சாப்பிடக்கூடியதாகவும் மிகவும் உருசியாகவும் இருக்கும்.படத்தில் இருப்பது லீ லகுன் விடுதியில் உள்ள உணவகம்.

வனுவாட்டு மக்கள் செம்பரத்தம் பூவினைக்காதில் அணிவதுண்டு. திருமணம் செய்தவர்கள் வலது காதில் அணிவார்கள். இடது காதில் திருமணம் செய்யாதவர்கள் அணிவார்கள். நான் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அங்கே கட்டிலில் இரண்டு செம்பரத்தம் பூக்களை வைத்திருந்தார்கள்.
கீழே இருப்பவை லீ லகுன் (Le Lagon Resort)விடுதிகளின் மேலதிகப்படங்கள்.
4 comments:
அழகான தமிழில் அழகான தீவுகளை அழகான படங்களுடன் பதிந்து வருகிறீர்கள். யாரும் அறிந்திடாத தென்பசிபிக் நாடான வனு-அற்று பற்றிய உங்கள் இடுகைகள் ஒரு தகவற் சுரங்கமாக அமைந்துள்ளது. இவை தமிழ் விக்கிபீடியாவிலும் இடம்பெற வேண்டும்.
நன்றிகள் மணியன்.
அழகான படங்கள்...ம்ஹிம் குடுத்து வைத்த பிறவி..
பக்கத்தில் தானே இருக்கிறது. நீங்களும் சென்று வரலாம் தானே தூயா.
Post a Comment