தொடர்ந்து பயணத்தின் போது 2ம் உலகப்போரில் அமெரிக்காப்படைகளினால் குளிப்பதற்கு கட்டப்பட்ட, தற்பொழுது ஒருவரும் பாவிக்கமுடியாத நிலையில் பழுதடைந்துள்ள கேணி ஒன்றினைக் காட்டினார்கள்.
அதனைப்பார்த்துவிட்டு சில நிமிடங்கள் பயணம் செய்ய 'VETETAP FIREWALK' என்ற இடத்தினை அடைந்தோம். அங்கே செம்பரத்தம் பூவினை ஒரு கூடையில் வைத்திருந்த பெண் ஒருவர் எங்களுக்கு காதில் சூடுவதற்கு செம்பரத்தம் பூக்களைத் தந்தார். நாங்கள் ஒரு கொட்டில் இருக்க அதற்கு முன்னால் உள்ள எரிமலைக்கற்களின் மேல் விறகுகள் இட்டு, நெருப்பினை மூட்டினார்கள். நன்றாக எரிந்ததும் சாம்பலினை அகற்ற ஒருவர் அவ்விடத்தினை நோக்கிவந்தார்.
மேலாடை அணியாமல், ஒலைகளினால் வேயப்பட்ட ஆடையினை அணிந்து, தென்னம் பொச்சினைத் தலையில் சூடி நடந்து வந்தவர், எரிமலைக்கற்களின் மேல் நடந்தார்.
பெரும்பாலான சுற்றுலாக்களை வனு-அற்று நாட்டைச் சேர்ந்தவர்களே நடாத்துகிறார்கள். ஆனால் நான் சென்ற ஈவெட் தீவைச்சுற்றி வரும் இச்சுற்றுலாவினை அவுஸ்திரெலியா நாட்டவர்(படத்தில் பின்னுக்கு நிற்பவர்) வனுவாட்டு மக்களைக்கொண்டு நடாத்துகிறார்.
அந்த அவுஸ்திரெலியா நாட்டைச்சேர்ந்தவர் 1 முறை இந்த எரிமலைக்கற்களில் நடந்ததாகவும் சொன்னார். அதற்கு மனதினைத் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். எங்களுடன் வந்திருந்த ஒருவருக்கும் எரிமலைக்கற்களில் நடக்கிற எண்ணம் இருக்கவில்லை. நான் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைத்து மெதுவாக எரிமலைக் கற்களில் காலை வைத்தேன். சாடையாகச் சுட ஒரே ஒட்டமாக எரிமலைக் கற்களினூடாக ஓடினேன். ஒரே கைதட்டல் கிடைத்தது. பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி எரிமலைக் கற்களில் ஊடாக வேகமாக ஒடி வந்தேன். சாடையான சூடாகத் தான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் சொல்வது போல பயங்கர சூடு அல்ல. எதோ நெருப்புக்குள் நடந்து சாதனை படைத்து விட்டு திரும்பிவிட்டேன் என்று என்னுடன் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் என்னைப் பாராட்டினார்கள்.
4 comments:
//ஒரு கூடையில் வைத்திருந்த பெண் ஒருவர் எங்களுக்கு காதில் சூடுவதற்கு செம்பரத்தம் பூக்களைத் தந்தார்//
ஏதோ பொம்பிள காதில பூ வச்சிட்டான்னு சொல்லாம விட்டிங்களே...கிகிகிகிகி
படத்தில் வீரமாக நடப்பது நீங்க தானா?
தீ மிதித்த அரவின்தனுக்கு வாழ்த்துகள் :)
ஒரே வித்தியாசம், இங்க விரகு கோலுத்தி தீ மிதிப்பாங்க, அங்க
எரிமலைகற்கள் மிது.
ஆம். நான் தான் தூயா. ஆனால் வீரமாக ஒடினேன்.
வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஜீவன்
Post a Comment