சில சுற்றுலா நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல சுற்றுலாக்களை குறைந்த விலையில் நடாத்துகிறார்கள். அதாவது தனித்தனியே 2 அல்லது மூன்று இடங்களுக்கு செல்வதற்கு செலவிடும் பணத்தை 2 அல்லது 3 சுற்றுலாவையும் ஒரே நிறுவனத்தில் ஒரே நாளில் சென்றால் பணத்தின் செலவைக்குறைக்கலாம். Horizon tours மூலம் போட்விலா நகரம்(பகுதி 2ல் விபரித்திருக்கிறேன்),எரகொர்(Erakor village -Namo Nana Kaljarel Vilij -பகுதி 5ல் விபரித்திருக்கிறேன்),BLUE WATER ISLAND RESORT ஆகிய மூன்றையும் பார்க்க ஒரே நாளில் 3500 வாற்றுக்கள் தேவைப்பட்டது. தனித்தனியே சென்று இருந்தால் குறைந்தது 6000வாற்றுக்கள் தேவைப்பட்டிருக்கும்.(நான் இந்நாட்டுக்கு சென்றபோது ஒரு அவுஸ்திரெலியா வெள்ளி கிட்டத்தட்ட 80 வனுவாட்டு வாற்றுகளுக்கு சமனாக இருந்தது.)

போட் விலாவில் இருந்து 30 நிமிடங்கள் வாகனத்தில் பிரயாணித்தால் நீல நீர் (BLUE WATER)என்ற இடத்திற்கு செல்லலாம். உள்ளூர்வாசிகள் Blue Hole என்றும் சொல்வார்கள். இந்த இடத்தில் தான் BLUE WATER ISLAND RESORT உள்ளன. இங்கே உள்ள நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடத்தில்(aquarium) ஆமைகள்,சுறா மீன்கள் உட்பட மீன்கள், நண்டுகள் உள்ளன. இங்கே ஆமைகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவு ஊட்டலாம். நானும் பப்பாசிப் பழத்தை ஆமை ஒன்றுக்கு ஊட்டினேன்.
2 comments:
ஆமைக்கு உணவளித்த வள்ளல் என்ற பட்டம் அந்த இருவருக்கும் சேரும் போல;)
எனக்கு வள்ளல் பட்டம் தந்தமைக்கு நன்றிகள். ஆமைக்கு உணவு வழங்குபவர்களில் இருப்பவர் நான், நிற்பவர் வழிகாட்டி.
Post a Comment