2005ம் ஆண்டில் நான் சென்ற இந்த நியூசிலாந்து சுற்றுலாவில் 7 நாட்களுக்குள் முக்கியமாக வொக்ஸ்கிளேசியரையும், மில்வேட் ஒலியையும் பார்ப்பதற்காகவே எனது பயண ஒழுங்குகளை அமைத்திருந்தேன். இதனால் தான் 3ம் நாள் அன்று வொக்ஸ்கிளேசியரில் இருந்து வெளிக்கிட்டு குயின்ஸ்டவுனை அடைய நான்கரை மணித்தியாலம் பயணம் செய்தேன். 5ம் நாளில் மில்வோட் ஒலியைப் பார்ப்பதாக முடிவு செய்திருந்தேன். 4ம் நாளில் குயின்ஸ்டவுனில் வேகப் படகில் பயணம், Queenstown gondolaக்கும் செல்ல நினைத்திருந்தேன். இரவு ரி ஆனாவில் தங்க முடிவு செய்திருந்தேன். குயின்ஸ்டவுனை(Queenstown) அடையும் போது கிட்டத்தட்ட மாலை 6 மணியாகிவிட்டது. குயின்ஸ்டவுனில் நான் தங்கியிருந்த விடுதியிற்கு செல்லும் பாதை அறிய, குயின்ஸ்டவுன் வரைபடம் பெற அருகில் இருந்த சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன்.1ம், 2ம் நாட்களில் இரவு தங்கியிருந்த கொகிரிகா, வொக்ஸ் கிளேசியரில் 6 மணிக்குப் பிறகு பார்ப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் குயின்ஸ்டவுனில் அன்று இரவு குயின்ஸ்டவுன் cable car -gondolaக்கு செல்லலாம். அங்கே மெளரி நடனம் பார்க்க முடியும் என்று சுற்றுலா தகவல் மையத்தில் சொன்னார்கள். அன்று cable car -gondolaக்கு செல்வதற்கும், மறுநாள் (4ம் நாள்) குயின்ஸ்டவுனில் வேகப் படகில் பயணிப்பதற்கும், 4ம் நாள் இரவு செல்லும் ரி ஆனா குகைக்குக்கு செல்வதற்கும், 5ம் நாள் மில்வோட் ஒலியில் படகில் பயணிப்பதற்கும் நுளைவுச்சீட்டினை முன்பதிவு செய்தேன். விடுதிக்கு சென்று உடமைகளை வைத்தபின்பு குயுன்ஸ்டவுன் skyline க்கு சென்றேன். மலையின் அடியில் இருந்து மலை உச்சிக்கு கம்பிகையிற்றினால்( cable car -gondola) மேலே செல்லவேண்டும்.




மலை உச்சியைக்கு சென்றதும் உச்சியில் இருந்து குயின்ஸ்டவுனின் அழகை இரசித்தேன்.


மலை உச்சியில் உணவகமும், மலை ஊச்சியில் இருந்து கீழே செல்லும் பாதையில் சறுக்கிக் கொண்டு செல்லும் விளையாடும் இடமும், நியூசிலாந்துப் பழங்குடியினர் ஆடும் ஆட்டம் நடைபெறும் இடமும் இருந்தன.

நியூசிலாந்துப் பழங்குடியினரை மெளரி(Maori)என்று அழைப்பார்கள்.அவர்களின் மொழிகளில் உரத்த குரலில் பாடி ஆடும் நடன நிகழ்வினை இங்கு காணலாம்.



இங்கேயுள்ள மெளரி மக்களது கடவுளின் சிலையினை கீழே இணைந்திருக்கின்ற படத்தில் காணலாம்.

மலை உச்சியில் இருந்து இறங்கிய பின்பு இரவு குயின்ஸ்டவுனில் உள்ள உணவகங்களுக்கு சென்று பார்த்தேன். பெரும்பாலான உணவகங்களில் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். தாய்லாந்து உணவகம் ஒன்றுக்கு சென்றேன். அங்கும் மக்கள் நிரம்பி வழிந்து சிலர் வரிசையில் இடம் கிடைக்கும் வரை நின்றார்கள். நானும் இடம்கிடைக்கும் வரை வரிசையில் நின்று 10,15 நிமிடங்களின் பின்பு எனக்கு இடம் கிடைத்தது. உணவை உண்டதும் அன்று இரவு தங்கும் விடுதிக்கு சென்றேன். விடுதி ஏரிக்கரையின் அருகில் இருந்தது.
4 comments:
என்னங்க இது மில்ஃபோர்ட் சவுண்ட் என்பதில் அந்த சவுண்டை ஒலின்னு இப்படி 'முழி' பெயர்த்துட்டீங்க!!!!!!
டௌட்ஃபுல் சவுண்ட், குவீன் ஷாலட் சவுண்டுன்னு நியூஸியில் ஏராளமா இருக்கே!
டி ஆனாவிலே ஒளிரும் புழுக்கள் குகைகளைப் பார்க்கலையா?
குவீன்ஸ்டவுன் கோண்டாலாவில் மேலே போனால் வியூ அற்புதம்தான்.
படங்கள் அருமையா வந்துருக்கு.
டி ஆனாவிலே ஒளிரும் புழுக்கள் குகைகளைப் பார்க்கலையா?
--------------------------
எனது இப்பதிவில் 4ம் நாளில் ரி ஆனாவுக்குகைக்கு செல்ல முன்பதிவு செய்ததாகச் சொல்லியிருக்கிறேன்.
இது உங்கள் பார்வைக்கு.
http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_24.html
பின்னூட்டம் வெளியிட வேண்டாம். உங்கள் தொடர் வரட்டும் முதலில்.
நம்மது வெளிவந்து 4 வருசம் ஆகுது.
நியூஸிலாந்து என்னும் புத்தகம் கடந்த ஜூன் மாதம் சந்தியா பதிப்பகம் வெளியீடு செய்தார்கள்.அதிலும் இந்த விவரங்கள் உள்ளன.
அதை எழுதியது நாந்தான்.
தகவலுக்கு நன்றிகள்.
Post a Comment