எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 16, 2010

நியூசிலாந்து 17 -Puzzling World (குழப்பமான உலகம்)

அழகிய ஏரிகளை இரசித்துக் கொண்டு கிட்டத்தட்ட மதியம் ஒரு மணியளவில் வானகாவினை அடைந்தோம். வீதியில் அருகில் இருந்தது Puzzling World(குழப்பமான உலகம்).அங்கே சில கட்டிடங்கள் விழுவது போல சரிந்த நிலையில் காணப்பட்டன.
.
சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லும்வரை Puzzling World பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நியூசிலாந்தில் சுற்றுலா வழிகாட்டும் நூல்களில் Puzzling World பற்றிய தகவல்கள் இருந்தன. பிரயாணிக்கும் வீதியின் அருகில் Puzzling World இருப்பதினாலும், நேரமும் இருந்ததினாலும், மாயத்தோற்றத்தில் (Illusion)அமைக்கப்பட்டுள்ள பல விடயங்களை உள்ள Puzzling Worldக்கு சென்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.


மேலே படத்தில் காணப்படும் கட்டடம் The Leaning Tower of Wanaka என்று அழைக்கப்படுகிறது. 53 பாகை சரிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Puzzling Worldக்கு செல்ல மாயத்தோற்றங்கள் உள்ள அறைகளுக்கும் , Maze(சுற்றிச் சுற்றிச் செல்லும் சிக்கலான வழி)க்கும் செல்ல தனித்தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டுக்கும் சேர்த்து கட்டணம் வாங்கினால் நுளைவுச்சீட்டுப் பணத்தில் சில தள்ளுபடிகள் உள்ளன. மெல்பேர்னுக்கு கிட்ட Arthurs Seat என்ற இடம் இருக்கிறது.அங்கே உள்ள Mazeக்கு 2003ம் ஆண்டு சென்றிருக்கிறேன். என்னுடன் அங்கு வந்தவருக்கு தெரியாமல் அந்த Mazeல் ஒளிக்கப் போய் திரும்பிவர பாதை தெரியாமல் கஸ்டப்பட்டுவிட்டேன். இங்கேயும் இந்த Mazeக்கு சென்று திரும்பிவரத் தெரியாமல் நேரம் செல்லவாய்ப்பிருக்கிறது. அன்று இரவு குயின்ஸ்டவுனில் உள்ள விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு பதிந்திருந்தேன். குயின்ஸ்டவுனுக்குச் செல்ல அன்று சில மணித்தியாலப் பயணங்கள் இருப்பதினால் நான் இந்த Mazeக்கு செல்லவில்லை. இதனால் மாயத்தோற்றங்கள் உள்ள அறைகளுக்கு செல்ல மட்டுமே நுளைவுச்சீட்டினை வாங்கினேன்.

ஒரு அறையில் பிரபல்யமானவர்களின் மாதிரி உருவங்கள் காணப்பட்டன.அறை முழுவதும் காணப்பட்ட 168 முகங்களும் எங்களைப் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அம்முகங்களில், மேற்கத்தைய நாடுகள் தங்களது சுயநலத்துக்காக ஆரம்பத்தில் பயங்கரவாதியாகச் சித்தரித்து, பிற்காலத்தில் எல்லோராலும் போற்றப்பட்ட நெல்சன் மண்டேலாவின் முகங்களும் இருந்தன.

வேறு ஒரு அறைக்கு சென்றால் கீழே நான் இணைத்த படத்தில் தெரிவது போல அறையின் இடதுபக்கத்தில் இருந்து அறையின் வலதுபக்கத்துக்கு செல்லும் போது இடதுபக்கத்தில் நிற்கும் போது உயரமாகத் தோற்றமளித்தவர் தற்பொழுது உயரம்குறைந்தவர் போல தோற்றமளிப்பார். அவ்வாறே வலதுபக்கத்தில் இருப்பவர் இடதுபக்கத்துக்கு செல்லும்போது உயரம் குறைந்தவராக இருப்பவர் உயரம் கூடியவராகத் தோற்றமளிப்பார். இந்த மாயத்தோற்ற தொழில் நுட்பம், நியூசிலாந்தில் படம் பிடிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற 'The Lord of the Rings' என்ற திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்டது.

கீழே நான் இணைத்த படங்களில் உள்ள அறை 15 பாகை கோணத்தில் சரிவாகக் கட்டப்பட்டுள்ளது. அறையின் உள்ளே இருப்பவை வழமைபோல அமைக்கப்பட்டிருந்தாலும், அறையின் உள்ளே செல்லும் போது விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படும்.


உரோமர் காலத்து மலசல கூடத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம். படத்தில் இருப்பவர்களில் சிலர் உண்மையான மனிதர்கள். சில சிலைகள்.

2 comments:

துளசி கோபால் said...

இந்த இடம் போனால் எங்களுக்கு நேரம் போவதே தெரியாது. மகளைக் கிளப்பிவருவதற்குள் நமக்குப் போதும்போதுமுன்னு ஆகிரும்.

அங்கே இல்யூஷன்ஸ் வகையில் நிறைய படங்களும் கையில் வச்சு விளையாடும் ரூபிக் க்யூப்ஸ் போல விளையாட்டுச் சாமான்களும் கிடைக்கும்.

ஒவ்வொரு சமயமும் ரெண்டு மூணுன்னு வாங்குவோம். எனக்கும் சேர்த்துத்தான்:-))))

Aravinthan said...

தொடர்ந்து வாசித்து நியூசிலாந்து பற்றிய பிரயோசனமான மேலதிகத்தகவல்களைத் தருவதற்கு நன்றிகள்