எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, November 17, 2010

நியூசிலாந்து 33 -குக் மலை(Mount Cook)

கால நிலை சரியில்லாததினால் குக் மலைக்கு(Mount Cook)ஆறாம் நாள் செல்ல முடியவில்லை. எனவே ஏழாம் நாள் காலையில் இந்த மலைக்கு செல்ல விரும்பினேன்.

7ம் நாள் பயணம்

காலையில் பெற்றோல் நிலையத்தில் வாகனத்துக்கான பெற்றோலைப் பெறும் போது, பெற்றோல் நிலையத்தில் இருந்த சிப்ஸ், விசுக்கோத்துகளை வாங்கி உண்டபின்பு குக் மலைக்கிராமத்தை நோக்கிப் பயணித்தேன். டுவைசலில் நல்ல உணவு முதல் நாள் கிடைக்காததினால் போகிறவழியில் வாங்கி உண்ணலாம் என முடிவெடுத்தேன். நியூசிலாந்தில் அதி உயரமான மலை குக் மலை. குக் மலை தான் அவுஸ்திரெலியாக் கண்டத்தில் மிக உயரமான மலை. மலையில் ஏற விரும்புபவர்களுக்கு விருப்பமான சவாலான மலை இது. டுவைசலில் இருந்து குக் மலைக்கு செல்லும் போது 'Lake pukaki' என்ற ஏரியைக் காணலாம்





நாற்பத்தைந்து நிமிடங்களில் குக் மலை நகரத்தை அடைந்தேன்.



உண்மையில் ஆறாம் நாள் பிரயாணத்தின் போது தான் நான் குக் மலைக்கு செல்வதாக முடிவெடுத்திருந்தேன். ஆனால் சீரற்ற காலநிலையினால் ஆறாம் நாள் மதியத்தில் இருந்து மாலை வரை டுவைசலில் உள்ள விடுதியில் தான் தங்கியிருந்தேன். ஏழாம் நாள் கிறைஸ்ச்சேர்ச்சுக்குப் பயணிக்க வேணுமென்பதினால் குக் மலைக் கிராமத்தை அடைந்ததும் உடனே திரும்பி டுவைசல் வழியாக கிறைஸ்ச்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன். நேரமின்மையினால் குக் மலையில் சுற்றுலா ஒன்றும் செய்யவில்லை.

குக் மலையில் இருந்து டுவைசல் செல்ல நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவை.




டுவைசலை அடைந்ததும் அங்கு நிக்காது கிறைஸ்சேர்ச்சினை நோக்கிப் பிரயாணித்தேன். டுவைசலில் இருந்து கிறைஸ் சேர்ச்சுக்கு Lake Tekapo என்ற ஏரி இருக்கும் இடத்தினூடாக செல்ல வேண்டும். டுவைசலில் இருந்து Lake Tekapo செல்ல எழுபத்தைந்து நிமிடங்கள் தேவை.

2 comments:

துளசி கோபால் said...

அடடா..... மழை உங்க பயணத்திட்டத்தைக் கெடுத்துருச்சே:(


இந்த மவுண்ட் குக் மவோரிகளுக்குப் புனிதமான ஒன்னு(நம்ம இமயமலை போல)

இதைப்பற்றி எழுதுன ஒரு பகுதிக்கு இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2006/06/43.html

நியூஸிலாந்து புத்தகத்தில் இடம்பெற்றது இது.

Aravinthan said...

இதைப்பற்றி எழுதுன ஒரு பகுதிக்கு இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2006/06/43.html

நியூஸிலாந்து புத்தகத்தில் இடம்பெற்றது இது.
----------------
வாசித்தேன். பல தெரியாத வரலாற்று விடயங்களை அறியக்கூடியதாக இருக்கிறது.