மழை விட்டதும் 'The Lord of the Rings' திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பயணித்தேன். போகும் வழியில் பார்த்த ஏரியினைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.
The 'Lord of the Rings' படம் எடுக்கும் போது அங்கு கட்டப்பட்ட கூடாரங்கள் எல்லாம் நான் சென்றபொழுது அகற்றப்பட்டதினால் அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. வெளியான நிலப்பரப்பினையே பார்த்தேன்.

மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மீண்டும் சுற்றுலா தகவல் மையத்துக்கு செல்ல ' The Lord of the Rings ' திரைப்படத்தில் நடித்த பாத்திரங்களின் உடைகளைஅணிந்து புகைப்படம் எடுக்க விரும்பினால் அதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் என்று சுற்றுலாத் தகவல் மையத்தில் வேலை பார்ப்பவர் சொன்னார். ஆனால் அதற்கு ஆறுபது நியூசிலாந்து வெள்ளிகள் பணம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். ஆறுபது வெள்ளிகளை ஏன் தண்டமாகக் கொடுக்க வேண்டும் என்பதினால் அன்று இரவு தங்கவேண்டிய இடத்துக்கு சென்றேன். சுற்றுலா தகவல் மையத்துக்கு மிக அருகில் தங்கவேண்டிய விடுதி(Mountain Chalet Motels) இருந்தது.
நேரம் கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி இருக்கும். நியூசிலாந்தில் இரண்டு மணிக்குப் பிறகு தான் பெரும்பாலான விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். மழை பெய்வதினாலும், விடுதி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டதினாலும் விடுதி உரிமையாளர் ஒரு மணிக்கே விடுதியில் தங்க அனுமதியளித்தார். தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதினால் ஒன்றும் பார்க்க முடியவில்லையே என்பதினால் விடுதியில் சென்று ஏமாற்றத்துடன் தூங்கினேன். மாலை நான்கு,ஐந்து மணியளவில் மழை விட, எதுக்கும் குக் மலைக்கு செல்லக்கூடிய தூரம் வரை செல்லலாம் என நினைத்து குக் மலையை நோக்கிப் பயணித்தேன். டுவைசலில் இருந்து குக் மலைக்கு செல்ல நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவை. ஆகவே போய் வர தொன்னூறு நிமிடங்கள் தேவை.

போகும் வழியில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.
இருளத்தொடங்க இடைவெளியில் திரும்பி மீண்டும் டுவைசலை அடைந்தேன். மறு நாள் காலை குக் மலை வரை போய்ப் பார்த்துவிட்டு கிறைஸ் சேர்ச்சிற்கு செல்லலாம் என நினைத்தேன். விடுதிக்கு வந்தபின்பு மதியம் பார்த்த சீன உணவகத்தில் உணவினை வாங்கி, விடுதியில் உணவினை உண்டேன். அவ்வுணவு உரூசியற்றதாக இருந்தது. அன்று நான் விரும்பியது போல எல்லாம் நடக்கவில்லை.
நியூசிலாந்துக்குப் பயணிக்கும் போது குக் மலைப் பகுதியில் தான் உலங்குவானூர்திப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாம் நாள் பயணத்தின் போது நான் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் ஆலோசனைப் படி வோக்ஸ் கிளேசியரில் உலங்கு வானூர்தியில் பயணத்தேன். கால நிலை சரியில்லை என்பதினால் டூவைசலில் நான் நின்றபோது உலங்குவானூர்திகள் அன்று குக் மலைப்பகுதிகளில் சுற்றுலாக்களில் ஈடுபடவில்லை.
4 comments:
தொடர்ந்து எழுதுங்க.
இப்படித்தான் சில சமயம் அடைமழை வந்து நம்ம பயணத் திட்டங்களை எல்லாம் கெடுத்து வச்சுரும்.
கிறைஸ்ட்சர்ச் நகர் ஒரு நாளில் நான்கு விதமான காலநிலையையும் கொண்டு வந்துரும். திடீர்ன்னு மழை, ஸ்நோ, ஹெய்ல் ஸ்டோன்ஸ், பலத்த காற்று, வெய்யில் இப்படி வெரி அன்ப்ரடிக்டபிள்:(
எப்பவும் ஜாக்கெட், ஸ்வெட்டரோடத்தான் பயணம் செய்யணும்.
ஜோதிஜி said...
தொடர்ந்து எழுதுங்க.
--------------------
உங்களைப் போன்றோர்கள் வாசிப்பதினால் தொடர்ந்து எழுதுவேன்.
Blogger துளசி கோபால் said...
இப்படித்தான் சில சமயம் அடைமழை வந்து நம்ம பயணத் திட்டங்களை எல்லாம் கெடுத்து வச்சுரும்.
கிறைஸ்ட்சர்ச் நகர் ஒரு நாளில் நான்கு விதமான காலநிலையையும் கொண்டு வந்துரும். திடீர்ன்னு மழை, ஸ்நோ, ஹெய்ல் ஸ்டோன்ஸ், பலத்த காற்று, வெய்யில் இப்படி வெரி அன்ப்ரடிக்டபிள்:(
எப்பவும் ஜாக்கெட், ஸ்வெட்டரோடத்தான் பயணம் செய்யணும்.
--------------------
நியூசிலாந்தில் பல முறை எனக்கு இப்படியான அனுபவங்கள் இருக்கின்றன.
Post a Comment