
கொகிரிகாவில் தங்கியிருந்த விடுதி உரிமையாளரிடம் உரையாடிய போது "வொக்ஸ் கிளேசியர், விரான்ஸ் ஜோசவ் ஆகிய இரண்டு இடங்களையும் ஒரு நாளில் பார்க்க நேரம் கிடைக்காது. இரண்டிலும் Fox Glacier வே சிறந்தது" என்றார். சுற்றுலா வழிகாட்டியின் உதவியுடன் Glacierல் சில பகுதிக்கு ஏறிச் சென்று பார்க்கலாம். பிரயாணம் ஆபத்தாக முடியும் என்பதினால் வழிகாட்டியின்றி கிளேசியரில் பயணிக்ககூடாது.விடுதி உரிமையாளார் இப்பிரயாணத்தில் நடக்க இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் என்றும், கால் வலிக்கும் என்றார். வழிகாட்டியின்றி கிளேசியர் இருக்கும் மலையின் அடிவாரத்துக்கு செல்ல ஒரு மணித்தியாலம் எடுக்கும். இதற்கு கட்டணமுமில்லை. அடிவாரம் வரை நடந்து செல்லுங்கள் என்றார். கிளேசியரில் ஏறுவதற்கு பதிலாக உலங்கு வானூர்தி அல்லது சிறிய விமானத்தில் பயணித்து வானிலிருந்து விரான்ஸ் ஜோசவ்,வொக்ஸ் கிளேசியர் ப்பார்க்கலாம். வேறு மலைகளையும் பார்க்கலாம். அத்துடன் ஒரு மலையின் உள்ள கிளேசியரின் ஒரு பகுதியில் பத்து,பதினைந்து நிமிடத்துக்கு இறக்கிவிடுவார்கள் என்றும் சொன்னார். Fox Glacierக்கு செல்ல Franz Josef இன் ஊடாகப் பிரயாணிக்க வேண்டும்.
காலை உணவை கொகிரிகாவில் உள்ள உணவகம் ஒன்றில் உண்டபின்பு, காலை 8 மணியளவில் விரான்ஸ் ஜோசவ் கிளேசியரை நோக்கிப் பயணித்தேன்.
கொகிரிகாவில் இருந்து கிட்டத்தட்ட 1மணித்தியாலமும் 45 நிமிடங்களும் சென்றால் Franz Josefவை அடையலாம்.

விரான்ஸ் ஜோசப் நகரத்தை 10 மணியளவில் அடைந்தேன். ஆனால் வொக்ஸ் கிளேசியரில் அதிக நேரம் செலவிடுவதினால் விரான்ஸ் ஜோசப்பில் உள்ள கிளேசியரைப் பார்க்காமல் சென்றேன்.
Franz Josef உள்ள நகர விதியில் பிரயாணிக்கும் போது எடுத்த புகைப்படத்தை கீழே காண்கிறீர்கள்.
Franz Josefவில் இருந்து மேலும் 15 நிமிடங்கள் பயணித்தால் Fox Glacierவை அடையலாம்.
No comments:
Post a Comment