புனாகைகியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எங்களிடம் தொப்பியோ, குடையோ இருக்கவில்லை. 'Pancake Rocks'க்கு நடந்து செல்லவேண்டும். அருகில் உள்ள கடையில் 4 நியூசிலாந்து வெள்ளிக்கு நீர் உட்புகாத ஆடையினை(Raincoat) வாங்கி அணிந்து கொண்டு 'Punakaiki Pancake rocks'ப் பார்க்க சென்றேன்.வளைந்து வளைந்து செல்லும் பாதையில் நடந்து செல்லவேண்டும்.

பாறைகள் அடுத்து அடுத்து அடுக்குவைத்தது போல அமைந்திருந்தன.மழை அதிகமாக இருந்ததினால் அதிக நேரம் நின்று நிதானமாக இந்த இயற்கை அழகை இரசிக்க முடியாமல் போய்விட்டது. 2009ல் சென்ற போது கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்துக்கு மேல் நின்று நிதானமாக அழகை இரசித்தேன். அதிக புகைப்படங்கள் எடுத்தேன். 2009ல் சென்றபோது பார்த்தவற்றை உங்களுடன் பகிரும்போது விரிவாக புனாகைகி Pancake பாறைகள் பற்றிச் சொல்கிறேன்.
இப்பாறைகளைப் பார்த்துக் கொண்டு வரும் போது பெரிய அலை அடிக்கும் சத்தம் கேட்டது. ஒரிடத்தில் பாறைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிக்கூடாக(blowhole) வந்த நீர் பனை மர உயரம் எழும்பி விழுந்தது.
சிட்னியில் இருப்பவர்கள் 2 மணித்தியாலம் பயணம் செய்து கயாமா என்ற இடத்தில் இப்படியான Blowholeப் பார்த்திருப்பார்கள்.



தமிழகத்து தமிழ்ப் படமான 'பிரியாமான தோழி'யில் வரும் 'பெண்ணே நீயூம் பெண்ணா' என்ற பாடல் காட்சியிலும் இந்தப்புனாகைகிப் பாறைகள் வருகின்றன.
பாறைகளைப் பார்த்தபின்பு அருகில் இருந்த ஒரே ஒரு உணவகத்திற்கு சென்றேன். (2009ல் சென்ற போது 2வதாக மேலும் ஒரு உணவகம் இருந்தது.)
மழையில் நனைந்ததினாலும் ஒழுங்காக மதிய உணவு உண்ணாததினால் ஏற்பட்ட பசியினாலும் அந்த உணவகத்தில் விற்கப் பட்ட soupக்குடித்து விட்டு பயணத்தை தொடங்கினேன்.
2 comments:
கலக்கலா இருக்கு கந்தப்புக் கிழவரும் போகோணும் எண்டு ஆசைப்பட்டவர்
நான் இங்கு இணைத்த படங்களைப் பார்ப்பதை விட நேரில் சென்று பார்த்தால் பல மடங்கு கலக்கலாகத் தெரியும்.
Post a Comment