எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.
Tuesday, February 07, 2012
நியூசிலாந்து 45 -உலகப் புகழ் பெற்ற பிளவுபட்ட அப்பிள் பாறை (Split Apple Rock)
பிக்டனில் இருந்து வெளிக்கிட்டு ரிவாக்காவினை அடையும் போது மாலை 6.30 ,7 மணியாகிவிட்டது. ஆனால் விடுதி இருக்கும் வீதியைத் தேடிக் களைத்துப் போனோம். வீதியில் செல்பவர்களைக் கேட்டுப் பார்த்து, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் ஒருவாறு விடுதியினைக் கண்டுபிடித்தோம். நல்லகாலம் இருளவில்லை. இருண்டிருந்தால் இன்னும் தேடிக்கொண்டிருந்திருப்போம். பொதுவாக நியூசிலாந்தின் தெற்கு நிலப்பரப்பில் பிரதான முக்கிய நகரங்களைத் தவிர மற்றைய இடங்களுக்கு இரவில் பயணிப்பது மிகவும் கடினமானது.
நாங்கள் இருந்த விடுதி(Chalets @ Terraced Gardens) சுற்றவர தோட்டங்களுக்கு நடுவில் இருந்தது. செம்மறி ஆடுகள் விடுதியின் பின்னால் நின்றன. றிவாக்காவில் இரவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மறு நாள் காலை எழுந்ததும் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் உள்ள கைத்தேரிதேரி(Kaiteriteri) என்ற இடத்துக்கு சென்றோம். விடுதியில் இருந்து 7, 8 நிமிடங்கள் பயணித்தால் கைத்தேரிதேரியினை அடையலாம். இங்கு தான் நான் முதல் நாள் முன்பதிவு செய்த அபில் தஸமான் தேசிய பூங்காவில் படகுப் பயணம் ஆரம்பிக்கும் இடமாகும். அங்குள்ள தகவல் நிலையத்தில் முன்பதிவு செய்த விபரத்தினைக் காட்டினேன். படகு வெளிக்கிட அரை மணித்தியாலம் இருப்பதினால் அருகில் இருந்த கடை ஒன்றில் சில விசுக்கோத்துக்கள், சிப்ஸ் போன்ற உணவுகளை வாங்கி உண்டேன்.
அபில் தஸமான் தேசிய பூங்காவில் பல சுற்றுலாப் பயணிகள் 2, 3 நாட்கள் தங்கித் தங்கி நடந்து செல்வார்கள். சிலர் படகுகளில் சென்று சில இடங்களில் நடந்து செல்வார்கள். நாங்கள் சென்ற பயணம் கிட்டத்தட்ட 3 மணித்தியாலப் படகுப் பயணம்.Torrent Bay, Bark Bay, Awaroa and Totaranui போன்ற இடங்களினூடகப் படகு சென்று வரும். நாங்கள் பயணித்த படகின் பெயர் Abel Tasman Sea Shuttles. காலை 9.15க்குப் படகு கைத்தேரிதேரியில் இருந்து வெளிக்கிட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் கைத்தேரிதேரியினை அடைகின்றது.
படகில் இருந்து இயற்கைக்காட்சிகளை இரசிக்கத் தொடங்கினேன்.
சில நிமிடப்பயணத்தின் பெரிய பாறை ஒன்றினைக் கண்டோம். பார்ப்பதற்கு பிளவுபட்ட அப்பிள் போலக் காட்சி அளிப்பதினால் Split Apple Rock என்று அழைப்பார்கள். இப்பாறை உலகப் புகழ் பெற்றது. இதனைப் பார்ப்பதற்கு பலர் இங்கு வருவார்கள்.
தொடர்ந்து அழகிய இயற்கைக்காட்சிகளைப் பார்த்தபடி பயணித்தோம்.
படகு கடற்கரை ஒன்றினை நோக்கி சென்று கொண்டிருந்தது.
Thursday, January 12, 2012
நியூசிலாந்து 44 - பிக்டனில் இருந்து ரிவாக்கா வரை
பிக்டனில் இருந்து கவ்லொக் நோக்கி Queen Charlotte Drive வீதி வழியாக பயணித்தேன். Queen Charlotte Driveல் பயணிக்கும் போது அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளில் பயணிக்கும் போது வாகனங்களை நிற்பாட்டி இயற்கை அழகினை இரசித்துப்பார்ப்பார்கள். இருள முதல் மொற்று எகாவிற்கு செல்ல வேண்டும் என்பதினால் ஒரிரு இடங்களிள் மட்டும் வாகனத்தினை நிற்பாட்டி புகைப்படங்களை எடுத்தேன்.
கவ்லொக்கினை அடைந்ததும் நெல்சனை நோக்கிப் பயணித்தோம்.
நெல்சனிலும் பார்ப்பதற்கு, சுற்றுலா செல்வதற்கு சில இடங்கள் இருக்கின்றன. நெல்சனை அடையும் போது மாலை 5.30 ஆகிவிட்டது. அங்கே இருந்த தாய்லாந்து உணவகமொன்றில் இரவு சாப்பாட்டினை வாங்கிக் கொண்டு மொற்று எகா நோக்கிப் பயணித்தோம். நாங்கள் அன்றைய இரவில் தங்க முன்பதிவு செய்த விடுதி மொற்று எகாவின் அருகில் இருக்கிற ரிவாக்கா (Riwaka)என்ற இடத்தில் உள்ளது.
நெல்சனில் இருந்து 45 நிமிட பயணதூரத்தில் தான் மொற்று எகா இருக்கின்றது. மேலும் 10 நிமிடங்கள் பயணித்தால் ரிவாக்கா என்ற இடம் வரும். ரிவாக்காவில் இருந்து 7,8 நிமிட தூரத்தில் Marahau என்ற இடம் இருக்கின்றது. இங்குதான் மறு நாள் நான் படகுப் பயணம் செய்யும் அபில் தஸ்மன் பூங்கா ஆரம்பிக்கின்றது. Marahau என்ற இடத்தினை அபில் தஸ்மன் கிராமம் என்றும் சொல்லுவார்கள்.
ரிவாக்காவினை அடையும் போது 6.30 ,7 மணியாகிவிட்டது. ஆனால் விடுதி இருக்கும் வீதியைக் காணமுடியவில்லை. வீதியில் செல்பவர்களைக் கேட்டுப் பார்த்து, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் ஒருவாறு விடுதியினைக் கண்டுபிடித்தோம்.
Tuesday, January 10, 2012
நியூசிலாந்து 43 -பிக்டன்(Picton)
வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்ல 3 மணித்தியாலம் கடல் பயணம் செய்யவேண்டும். பயணத்தின் இறுதி ஒரு மணித்தியாலம் புகழ்பெற்ற Marlborough Soundsக்கு ஊடாக பயணிக்க வேண்டும். நிலப்பரப்புக்கள் சூழவுள்ள மிகவும் குறுகலான இடம் தான் Marlborough Sounds.
வெலிங்டனில் காலை 10.25க்கு புறப்பட்ட கப்பல் பிக்டனை மதியம் 1.35 க்கு வந்தடைந்தது.
அன்று இரவினை Motueka(மொற்று எகா) என்ற இடத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தேன். பிக்டனில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலம் பயணித்தால் மொற்று எகாவினை அடையலாம். இரவு நேரங்களில் குளிர் காலங்களில் நியூசிலாந்தில் சில இடங்களில் பயணிப்பது பாதுகாப்பற்றது என்பதினால் 6, 7 மணிக்கு முன்பாக Motuekaக்கு செல்ல விரும்பினேன். பிக்டனில் வாடகை வாகனத்தினை வாங்கும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை 2 மணியாகிவிட்டது. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை. 4 மணிக்கு பிக்டனை விட்டு வெளிக்கிட்டால்தான் 6.30 மணியளவில் Motuekaவை அடையலாம். இடையில் இருக்கும் இரு மணித்தியாலங்களில் ஒரு மணித்தியாலத்தினை மால்பரோ சவுண்டில்(Marlborough Sound) உள்ள மிகவும் அழகான பகுதிக்கு படகில் செல்ல விரும்பினேன். வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு வரும் போது மல்பரோ சவுண்டின் ஒரு பகுதியூனூடாகப் பயணித்தாலும், மால்பரோ சவுண்டின் மிகவும் அழகான பகுதிக்கு செல்ல படகில் தான் பயணிக்க வேண்டும். படகில் பயணிக்க அருகில் இருந்த சுற்றுலா தகவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அச்சமயத்தில் பயணிக்க படகுகளில் இடம் இருக்கவில்லை. மறு நாள் நான் Abel Tasman National Park( அபில் தஸ்மான் தேசிய பூங்கா)வில் படகுப் பயணம் செய்ய விரும்பினேன். படகில் 3 மணித்தியாலம் பயணிக்க வேண்டும். பல சுற்றுலாப் பயணிகள் படகில் செல்ல விரும்புவதினால் சிலவேளை படகில் இடம் கிடைக்காமல் போகலாம். இதனால் பிக்டனில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்தின் மூலம் மறு நாள் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் படகில் பயணிக்க முன்பதிவு செய்தேன். ஆனால் முன்பதிவு செய்யும் போது கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் சுற்றுலாத்தகவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது. முன்பதிவு செய்ததும் உடனே அருகில் இருந்த ஆங்கில உணவகத்தில் potato chips வாங்கி உண்டபின்பு மூன்றரை மணியளவில் மொட்டுவெகாவை நோக்கிப் பயணித்தேன். பிக்டனில் இருந்து மொட்டுவேகாவுக்கு செல்ல நெல்சன்(Nelson) என்ற இடத்தினூடாக செல்ல வேண்டும். நெல்சனுக்கு செல்ல ஒரு மணித்தியாலமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் தேவை.
பிக்டனில் நெல்சனுக்கும் இடையில் இருக்கும் இடம் கவ்லொக்(Havelock). பிரதான வீதி(State Highway 6) பிக்டனில் ஆரம்பித்து பெலிங்கெம்(Blenheim)ஊடாக கவ்லொக் செல்கிறது. ஆனால் Queen Charlotte Drive என்ற புகழ் பெற்ற பாதையில் பயணித்தால் பெலிங்கெம் செல்லாமல் குறைந்த நேரத்தில்( 45 நிமிடங்களில்) கவ்லொக் செல்லலாம். ஆனால் இப்பாதை மிகவும் வலைந்து செல்லும் ஒடுக்கமானதாக இருக்கின்றது. அத்துடன் அழகான மால்பரோ சவுண்ட் கடற்கரையினுடாக செல்கின்றது.
'Queen Charlotte Drive' பாதை உயரமான இடத்தினூடாக ஆரம்பித்தது. பயணம் ஆரம்பித்து சில நிமிடங்களில் வாகனத்தினை நிறுத்தி பிக்டன் நகரின் இயற்கை அழகினைப் படம் பிடித்தேன்.
அழகிய இயற்கைக்காட்சிகளைப் படம் பிடித்தபின்பு பயணத்தினை தொடர்ந்தோம்.
Subscribe to:
Posts (Atom)









