எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Friday, May 31, 2013

நியூசிலாந்து 64 -கடற்கரையில் ஒரு கடல் சிங்கம்

கடல் நாய், கடல் சிங்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை கீழே நான் இணைத்திருந்த படத்தின் மூலம் அறியலாம்.
1)கடல் சிங்கம்.
2)கடல் நாய்
கடல் சிங்கம் - கடல் நாய்
கைக்கோராவில் உள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தில் இருந்து கடல் சிங்கம் இருக்கும் இடத்தினை அடைந்தோம். அங்கே உள்ள பாறைகளில் ஒரு கடல் சிங்கம் ஒன்று நித்திரையில் இருந்தது.
கடல்சிங்கத்துக்கு கிட்டசென்றால் அது தாக்கலாம் என்பதினால் பார்வையாளார்கள் அதன் அருகில் செல்லவில்லை. இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் கடற்கரையில் கடல் சிங்கம் போன்ற ஒரு உயிரினம் இருந்தால் மக்கள் அதனை சும்மாவிட்டு விட்டு செல்வார்களா?. எதாவது சேட்டை செய்வார்கள்.
கடற்கரையில் அருகில் இருக்கும் குன்றின் மேல் ஏறிச்செல்ல பாதை அமைத்திருக்கிறார்கள். அப்படிகளின் ஊடாக உயரமான இடத்துக்கு சென்று கடற்கரையின் அழகினை பலர் இரசிப்பார்கள். நானும் படியினூடாக உயரமான இடத்துக்கு செல்லச் சென்றேன்.
படிகளில் ஏறும் போதும் அழகிய புகைப்படங்களை எடுத்தேன்.
உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது கடற்கரை மிகவும் அழகாக இருந்தது.

2 comments:

துளசி கோபால் said...

அங்கிருந்து பார்த்தால் ஸீ லயன் காலனி ஒன்னு அருமையாகத் தெரியும்!

Aravinthan said...

தகவலுக்கு நன்றிகள்