எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, April 02, 2012

நியூசிலாந்து 48-நியூசிலாந்தின் மிகவும் நீளமான தொங்கி ஆடிக்கொண்டிருக்கிற பாலம் (Murchison Swingbridge)

Abel Tasman National Park( அபில் தஸ்மான் தேசிய பூங்கா)வில் மூன்று மணித்தியாலப் படகு பயண முடிவில் மதியம் 12 மணியளவில் கைத்தேரிதேரியை(Kaiteriteri) மீண்டும் அடைந்தோம். மதிய உணவினை கைத்தேரிதேரியில் உள்ள ஆங்கில உணவகம் ஒன்றில் உண்டோம். பிறகு அருகில் இருக்கும் எரிபொருள் நிலையத்தில் வாகனத்துக்கு தேவையான பெற்றோலைப் பெற்றதும் அன்று இரவு தங்க முன்பதிவு செய்த கிறேமவுத்தினை(Greymouth) நோக்கிப் பயணித்தோம். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது எரிபொருள் நிலையத்தில் பெற்றோலைப் பெறவேண்டும். நியூசிலாந்தின் தெற்கு தீவில் பல இடங்களில் மக்கள் வசிப்பதில்லை. அங்கு பெற்றோல் நிலையங்களும் இல்லை. கைத்தேரிதேரியில் இருந்து வெளிக்கிடும் போது மதியம் ஒரு மணியாகிவிட்டது. கைத்தேரிதேரியில் இருந்து வெஸ்ட்போட்(Westport) வழியாக கிறேமவுத் செல்ல 4 மணித்தியாலம் தேவை. இருள முதல் நியூசிலாந்தின் தெற்கு தீவில் பயணிப்பது பாதுகாப்பானது. கைத்தேரிதேரியில் மொற்று எகா என்ற இடம் 10 நிமிடப்பயண தூரத்தில் இருக்கிறது.
மொற்று எகாவில் இருந்து வெஸ்ட்போட் செல்ல 2 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் தேவை.
இயற்கை அழகினை இரசித்துக் கொண்டு பயணித்தோம்.
நியூசிலாந்தின் தெற்கு தீவில் இருக்கும் மக்களின் தொகையினை விட அங்கு வாழும் செம்மறி ஆடுகளின் தொகை அதிகம். அதாவது தெற்கு நியூசிலாந்தில் மக்கள் சிறுபான்மையினர். செம்மறி ஆடுகள் தான் பெரும்பான்மையினர்.
பயணிக்கும் போது இடையில் தென்பட்ட சிறு நகரமான Glenhopeல் நின்று தேநீர் அருந்தினோம். இதனால் 4.30 மணியளவில் தான் வெஸ்ட்போட்டிற்கு செல்ல முடியும். நாங்கள் Murchison என்ற இடத்தினை கிட்டத்தட்ட 3.30 மணிக்கு அடைந்துவிட்டோம். 1929ம் ஆண்டில் இவ்விடத்தில் பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. நியூசிலாந்தின் மிகவும் நீளமான தொங்கி ஆடிக்கொண்டிருக்கிற பாலமும்(New Zealand's longest swingbridge) இங்கு தான் இருக்கிறது. பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பாலத்தில் 160 மீற்றர் நடந்து மறுபக்கம் சென்றபின்பு கம்பியில் தொங்கிக் கொண்டு சறுக்கிக் கொண்டு(Comet Rides) வர வேண்டும்.என்னுடன் பயணித்தவர்கள் இப்பாலத்தில் நடந்து, பிறகு கம்பியில் தொங்கிக் கொண்டுவர விரும்பியதினால் நானும் பாலத்தின் நடக்க விரும்பினேன்.
ஆற்றினிலே மிக வேகப்படகில்(Jet Boat) சவாரி செய்யலாம். குயின்ஸ்டவுனில் நான் இதே மாதிரிப் படகில் பயணித்த(நியூசிலாந்து 21, நியூசிலாந்து 22 )அனுபவங்களை சொல்லியிருக்கிறேன் இந்த ஆற்றில் தண்ணீரை வடித்து தங்கத்தினைப்(Gold panning) பெறலாம். நான் முன்பு கிறேமவுத்தில்(Greymouth) 'Shanty Town' என்ற இடத்தில் தங்கத்தினைப் பெற்றிருக்கிறேன். (நியூசிலாந்து 7 யில் எனது அனுபவங்களை சொல்லியிருக்கிறேன்) சில சுற்றுலாப்பயணிகள் இங்கு இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு மரங்களுக்கிடையே நடந்து வருவார்கள்(Nature walks). இத்தொங்கு பாலத்தில் நடந்து மறு கரைக்கு சென்ற பின்பு, கம்பியில் தொங்கி வந்தோம். 'Murchison swingbridge' விட்டு வெளிக்கிட மாலை 4.30 ஆகிவிட்டது. இனி வெஸ்ட்போட் சென்று கிறேமவுத் செல்ல இருட்டி விடும் என்பதினால் Inangahua ,Reefton நகரங்களினூடாக கிறேமவுத்தினை நோக்கிப் பயணித்தோம்.

4 comments:

துளசி கோபால் said...

எல்லா சாலைகளும் எப்படி பளிச்ன்னு ஆள் அரவம் இல்லாமக் கிடக்குதுன்னு படங்களைப்பார்த்தால் தெரியுதுல்லே?

அதான் நம்ம ஊருக்குப்போனால் மக்கள் கூட்டம் முகத்தில் அறைவதுபோல் ஒரு உணர்ச்சி.

இப்போ எங்களுக்கு பத்து ஆடுதான் நபருக்கு:( முன்பு 12 இருந்துச்சு. ஆடு தொகை குறைஞ்சு இப்ப மாடுகள் பெருகிவருது.

Anonymous said...

don't publish this! அது நீலமான இல்ல, நீளமான.. நீலம் - blue...

Aravinthan said...

Anonymous Anonymous said...

don't publish this! அது நீலமான இல்ல, நீளமான.. நீலம் - blue...
---------------------------

தவறுதலாக நீலம் என்று எழுதியதைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Aravinthan said...

எல்லா சாலைகளும் எப்படி பளிச்ன்னு ஆள் அரவம் இல்லாமக் கிடக்குதுன்னு படங்களைப்பார்த்தால் தெரியுதுல்லே?

அதான் நம்ம ஊருக்குப்போனால் மக்கள் கூட்டம் முகத்தில் அறைவதுபோல் ஒரு உணர்ச்சி.

இப்போ எங்களுக்கு பத்து ஆடுதான் நபருக்கு:( முன்பு 12 இருந்துச்சு. ஆடு தொகை குறைஞ்சு இப்ப மாடுகள் பெருகிவருது.
----------------------
தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.