
அந்தாட்டிக்காவில் விஞ்ஞானிகள் பனிக்கட்டிகள் உள்ள இடங்களில் பிரயாணம் செய்யும் போது Hagglund என்ற வாகனத்தில் பயணிப்பார்கள். அவர்கள் குன்றின்மீதும், நீர்நிலைகளிலும் பயணிப்பார்கள்.அதே மாதிரியான Hagglund வாகனத்தில் நாங்கள் குன்றின்மீதும், சிறு நீர்நிலையிலும் பயணித்தோம். பயணத்தின் போது வாகன சாரதி, எங்களுக்கு பல தகவல்களைத் தந்தார்.


பூச்சியத்துக்கு கீழ் ஐந்து பாகை(-5 ) வெப்பநிலையில் இருக்கக்கூடிய அறை ஒன்றிற்கு சென்றோம். அவ்வறையை அந்தாட்டிக்காவைப் போல செயற்கையாக செய்திருந்தார்கள். சடுதியாக பூச்சியத்துக்கு கீழ் 18 பாகை(-18) வெப்பநிலைக்கு அறையின் வெப்பநிலையினைக் கொண்டுவந்தார்கள். அந்தாட்டிக்காவில் புயல் வீசுவது போல அவ்வெப்பநிலையில் காற்று மணித்தியாலத்திற்கு 40கிலோமிற்றர் வேகத்தில் பலமாக வீசியது. ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒருமுறை இக்காற்று அவ்வறையில் வீசுவதற்கு ஏற்றவகையில் அமைக்கத்திருந்தார்கள். இவ்வறைக்கு செல்லுவதற்கு சூடான ஆடையினை அணியவேண்டும். அத்துடன் பெரிய குளிரைத்தாங்கக் கூடிய பாதணியினையும் அணிய வேண்டும்.

அந்தாட்டிக்கா கண்டத்தில் காணப்படும் சிறிய நீல நிறப் பென்குயின்களை இந்த அந்தாட்டிக்கா நிலையத்தில் பார்க்கலாம்.

அந்தாட்டிக்கா கண்டத்தில் உள்ளதுபோல பல உருவங்கள் செய்து இங்கு காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.


இன்னுமொரு அறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இருந்து எவ்வாறு பிரிந்து சென்றன என்பவற்றைக் காணொளிகளில் காண்பித்தார்கள். அந்தாட்டிக்கா பற்றிய மேலும் பல சுவையான தகவல்களை இவ் அந்தாட்டிக்கா நிலையத்தில் அறிந்தேன்.
6 comments:
அருமையான அனுபவம்.
எங்கூர் பற்றி வாசித்ததும் மனசு 'ஜிவ்'ன்னு பறக்குது.
உலகிலேயே இப்படி அண்டார்ட்டிக்கா விஷயம் சொல்லும் நிலையம் இது ஒன்னுதாங்க.
சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இது ரொம்ப முக்கியம். எங்கூர் மியூஸியத்திலும் ஒரு அண்டார்ட்டிக் செக்ஷன் ஒன்னு அருமையா இருக்கு.
நன்றிகள் அமுதா கிருஸ்ணா
தொடர்ந்து வாசித்துக் கருத்துக்கள் பகிரும் துளசி கோபாலுக்கு நன்றிகள்
வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....
நன்றிகள் அம்பாளடியாள்
Post a Comment