
2005ல் என்னிடம் கிட்டத்தட்ட 40000 Kris flyer புள்ளிகள்(points) வைத்திருந்தேன்.சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட 40000 புள்ளிகளுக்கு பயணிக்கத் தேவையான வெளினாடு நியூசிலாந்தாகும். 25000 புள்ளிகள் இருந்தால் சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு இலவசமாக விமானப்பயணம்(Return Tickets) சென்று வரலாம். இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது. 'Star Alliance' மூலம் சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லக்கூடிய ஒரே ஒரு விமானம் 'Air Newzealand'.
இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், வெலிங்டன், ரொட்டுறுவா போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கும் பறக்கிறது. ஈழத்தமிழர்கள் உட்பட பெரும்பாலான மக்கள், வட நியூசிலாந்திலே வாழ்கிறார்கள். தென் நியூசிலாந்தில் சனத்தொகை மிகவும் குறைவு.இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகக்,மிக குறைவு. ஆனால் நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் 10ல் 9 வீதத்தினர் தென் நியூசிலாந்துக்கே விரும்பிப் பயணிப்பார்கள். தென் நியூசிலாந்து, வட நியூசிலாந்தை விட இயற்கை அழகு கூடியது. இதனால் நான் தென் நியூசிலாந்துக்கே பிரயாணம் செய்ய விரும்பினேன். அதிலும் தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகள் கொண்டவை என்பதினால் கிரைஸ் சேர்ச்சுக்கே பயணிக்க விரும்பி விமானச் சீட்டினை பெற முனைந்தேன். கொஞ்சம் பிந்தி வீமானச்சீட்டினைப் பதிந்ததினால், நான் விரும்பிய நேரந்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதனால் 7 முழுநாட்களுக்கும், 2 அரை நாட்களுக்கும் நியூசிலாந்தில் தங்கவே எனக்கு வீமானச் சீட்டு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணித்தியாலம் மகிழுந்தில் பிரயாணம் செய்து தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு செல்வது என்று முடி வெடுத்தேன்.
நியூசிலாந்துக்கு பயணிக்க முன்பே 8 இரவும் எங்கே தங்குவது என்று முடிவெடுத்து இணையத்தின் மூலம் விடுதிகளைப் தெரிவு செய்து பணத்தையும் கட்டிவிட்டேன். நியூசிலாந்தில் பெரும்பாலான எல்லா விடுதிகளிலும் காலை உணவுகளுக்கு தனியாகக்கட்டணம் செலுத்த வேண்டும். மிகக்குறைவான விடுதிகளில் வாடகைப்பணத்தில் காலை உணவுகள் தரப்படுகின்றன. கிரைஸ் சேர்சில் உள்ள சில விடுதிகள், விமான நிலையத்தில் இருந்து விடுதிகளுக்கு சென்று வர இலவசச் சேவைகளினை வழங்குகின்றன.
வட நியூசிலாந்தை விட தென் நியூசிலாந்தில் மகிழுந்து வாடகைக்கு குறைந்த விலையில் எடுக்கலாம். தங்குமிட விடுதிகளும் தென் நியூசிலாந்தில் தான் குறைந்த விலையில் இருக்கும். பொதுவாக நியூசிலாந்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான குளிர்காலத்தில் இன்னும் மலிவான விலையில் விடுதிகளைப் பெற முடியும்.
ஒரு நிறுவனத்தின் மகிழுந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழுந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான நிலையத்தில் மகிழுந்தினை 7 நாட்களுக்கு வாடகைக்கு பெற்றேன். 6 நாட்கள் மகிழுந்தினை வாடகைக்கு பெறுவதினால் 7 வது நாள் எனக்கு இலவசமாக உபயோகிக்க கூடிய வசதி இருந்தது.
தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதிகளின் வரைபடம் ஒரே ஒரு பக்கமுடைய காகிதத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது அங்கே உள்ள சுற்றுலா நிறுவனங்களில் அந்நகரங்களில் உள்ள வீதிகளின் வரைபடங்களை கேட்டுப் பெறலாம். தென் நியூசிலாந்தின் பெரும்பாலான நகரங்களில் 4,5 வீதிகள் தான் இருக்கின்றன. ஆனால் கிரைஸ் சேர்ச்சில் அதிக வீதிகளைக் காணலாம்.

நான் நியூசிலாந்துக்குப் பயணிக்க முன்பே சிட்னியில் இருக்கும் போது நியூசிலாந்தில் என்ன பார்ப்பது என்பவற்றை முடிவு செய்திருந்தேன். எனினும் நியூசிலாந்தில் சுற்றுலா மையங்களில் கிடைக்கும் மேலதிக விபரங்களின் மூலம் சில புதிய பயணங்களைச் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்திருந்தேன்.
முதல் நாள் பயணம் - இல் Christchurch இருந்து மேற்காக Arthur's Pass வழியாக Greymouth அடைந்து வடக்கு நோக்கி Punakaiki சென்று மறுபடியும் Greymouth வழியாக Hokitika .
2ம் நாள் இல் Hokitika இருந்து Franz Josepf ஊடாக சென்று அருகில் உள்ள Fox Glazier
3ம் நாள் Fox Glazier இல் இருந்து Haast வழியாக Wanaka அடைந்து மேலும் தெற்கு நோக்கி சென்று Queenstown
4 ம் நாள் Queenstownல் இருந்து தெற்கு நோக்கி Te Anau
5ம் நாள் Te Anauஇல் இருந்து வட மேற்கே உள்ள Milford Sound அடைந்து மறு படியும் Te Anauக்கு வந்து மீண்டும் Queenstown .
6ம் நாள் Queenstownல் இருந்து Cromwell,Omarama வழியாக Twizel
7ம் நாள் Twizelஇல் இருந்து Mount Cook சென்று Lake Takapo வழியாக Christchurch .
கிரைஸ் சேர்ச் விடுதியினை அடைந்ததும் மறுநாள் பிரயாணம் பற்றி, எங்கே செல்வது எவற்றைப்பார்ப்பது என்பது பற்றி விமான நிலைய சுற்றுலா மையத்தில் கிடைத்த தகவல்கள், புத்தகங்களில் மூழ்கிவிட்டேன்.
4 comments:
நல்வரவு.
நீங்க வரும் சமயம் நான் நாட்டில் இல்லாமப் போயிட்டேனேன்னு இருக்கு.
உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாக இருக்கேன்.
நீங்கள் சொல்லும் அழகான இந்த தெகுத்தீவின் கிறைஸ்ட்சர்ச் நகரில்தான் 22 வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.
*******8 oops...
தெற்குத் தீவு என்று வாசிக்கணும்.
தட்டச்சுப்பிழை.
துளசி கோபால் said...
நல்வரவு.
நீங்க வரும் சமயம் நான் நாட்டில் இல்லாமப் போயிட்டேனேன்னு இருக்கு.
உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாக இருக்கேன்.
நீங்கள் சொல்லும் அழகான இந்த தெகுத்தீவின் கிறைஸ்ட்சர்ச் நகரில்தான் 22 வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.
----------------------------------------------
நன்றிகள் உங்கள் கருத்துக்கு
இப்பதிவில் சொல்லப்படும் எனது அனுபவம் எனது 2005ம் ஆண்டில் நியூசிலாந்தில் பயணித்தபோது பார்த்தவை பற்றியது. அதன் பிறகு 2008, 2009லும் நியூசிலாந்துக்கு பயணித்திருக்கிறேன். உங்கள் ஊருக்கும் வந்திருக்கிறேன்
துளசி கோபால் said...
*******8 oops...
தெற்குத் தீவு என்று வாசிக்கணும்.
தட்டச்சுப்பிழை.
May 25, 2010 12:52 AM
-------------
நான் நியூசிலாந்து பற்றி பிழையான கருத்துக்கள் பகிர்ந்திருந்தால் சுட்டிக் காட்டுங்கள்
Post a Comment