எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, September 23, 2008

வனுவாட்டு - பகுதி17 Eboule ஆற்றில் வள்ளத்தில் பயணம்

ஈவெட்(Efate) தீவைச் சுற்றி ஒரு நாள் பயணத்தின் போது Beachcomberல் மதிய உணவு உண்டும், கடலிழும், நீர் நிலையிலும் நீந்திய பின்பு மீண்டும் பயணித்து எங்களது வாகனம் Eboule ஆற்றுப்ப்பாலத்தினை(River Bridge ) அடைந்தது.

பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

வனுவாட்டில் எப்பொழுது பார்த்தாலும் ஆறுகளிலும் , நீர் நிலைகளிலும் குளித்துக் கொண்டிருப்பவர்களைக் காணலாம். இந்த Eboule ஆற்றிலும் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆற்றில் வனுவாட்டு மரம் ஒன்றினால் செய்யப்பட்ட வள்ளம்(Canoe) ஒன்றினை ஒருவர் நாங்கள் இருந்த கரைக்கு ஒட்டி வந்தார்.
வள்ள ஒட்டியை விட எங்களில் 9பேர் இருந்தோம். இதனால் இன்னொரு வள்ளமும் வர, எங்களில் அதிக நிறை கூடிய நான்கு பேரை ஒரு வள்ளத்திலும், மற்றைய ஐந்து பேரை மற்றைய வள்ளத்திலும் ஏற்றினார்கள்.

வள்ளத்தில் ஒரு பக்கத்தில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் அவருக்கு எதிர்த்திசையில் மாறி இருந்தவாறே செல்ல வேண்டும். எங்கள் வள்ளம் முதலில் சென்றது. எனது வள்ளத்தில் இருந்து மற்றைய வள்ளத்தில் இருப்பவர்களினைப் புகைப்படக்கருவியினால் எடுத்தபடத்தினைக் கீழே காண்கிறீர்கள்.

இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறே பயணித்தேன்.


கிட்டத்தட்ட 15 நிமிடப்பயணத்தின் பின்பு, அந்த ஆறு பசுபிக் சமுத்திரத்துடன் சேருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

4 comments:

சி தயாளன் said...

தொடர்ந்து எழுதுங்கள்..அரவிந்தன்

Anonymous said...

கடைசிக்கு முதல் உள்ள படத்தை பார்த்தால் மங்க்ரூவ் வெட் லாண்ட் போல உள்ளது.இல்லையா அரவிந்தன்?

உங்கள் பதிவை பற்றி என்ன புதிதாக சொல்ல போகின்றேன்...முதலே படித்து வனு-அற்றுக்கு போக வேண்டும் என முடிவு செய்தது தான் ஊருக்கே தெரியுமே.. :)

தொடர்ந்து எழுதுங்கள்.

Aravinthan said...

உங்கள் கருத்துக்கு நன்றிகள் டொன் லீ

Aravinthan said...

உங்கள் கருத்துக்கு நன்றிகள் தூயா