
வனுவாட்டு என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனுவாட்டு நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன். தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனுவாட்டு அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விமானத்தில் பிரயாணம் செல்ல 3அரை மணித்தியாலம் எடுக்கும். பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய இருனாடுகளினால் ஒரே நேரத்தில் ஆட்சிக்குட்பட்ட வனுவாட்டு 1980ல் சுதந்திரம் அடைந்தது. ஆங்கில எழுத்து Y வடிவில் 83 தீவுகளினை கொண்ட இன்னாட்டின் தலை நகரம் Efate தீவில் உள்ள போட் விலா(Port Vila). இன்னாட்டின் 110 மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் தற்பொழுது 109 மொழிகள்(Akei,Amblong,Aore........)பேசப்பட்டு 1 மொழி(Ifo) வழக்கில் இல்லாது போய் விட்டது. அரச மொழியாக பிஸ்லாமா(bislama a pidgin language, based on English), ஆங்கிலம், பிரேன்சு ஆகிய மூன்று மொழிகளும் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் இருந்து பிறந்த பிஸ்லாமா( அருகில் உள்ள நியூ கலிடொனியா நாட்டிலும் பேசப்படுகிறது) மொழி இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. இங்குள்ளவர்களில் 92 வீதமானவர்கள் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கற்காலத்து கடவுள்களினை வழிபாடு செய்கிறார்கள். 80 வீதமான மக்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கமத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலர் மின்பிடித்தொழிலில் ஈடு படுகிறார்கள். கிராமப்புறங்களில் இங்கு கல்வி கற்பதற்கு அதிக பணம் தேவை என்பதினால் கிராமப்புறமக்களில் பலர் படிக்கச் செல்வதில்லை.61 வீதமான சிறுவர்கள் 5ம் வகுப்பு வரையே படிக்கிறார்கள்.20 வீதமான சிறுவர்களே 5ம் வகுப்புக்கு மேல் படிக்கிறார்கள். இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுள் காலம் 61 வயது மட்டுமே. 206,000 மக்கள் உள்ள இன்னாட்டில் 40 வீதத்துக்கு குறைவான மக்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்னாட்டில் 6வீதமான மக்களே வெளினாட்டில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரித்தானியா,பிரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் வந்த ஐரோப்பியர்கள்.,வியட்னாம் நாட்டில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், சீனர்கள் , தென் பசுபிக் நாடுகளில் இருந்து வந்தவர்களும் அடங்குவார்கள். இன்னாட்டுக்கு நான் அண்மையில் 6 நாட்களுக்கு பிரயாணம் செய்தேன்.

வனுவாட்டு தேசியக்கொடியில் உள்ள Y வடிவில் உள்ள மஞ்சள் நிறம் அன்னாடு Y வடிவில் அமைந்ததினையும், மஞ்சள் நிறம் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தையும் கிறிஸ்தவமதத்தையும்,பச்சை நிறம் அங்குள்ள பச்சைப்பசலான நிலத்தையும், சிகப்பு நிறம் சுதந்திரப்போரில் ஒடிய குருதியின் நிறத்தையும், கருப்பு நிறம் அங்குள்ள பூர்வீகமக்களினையும் குறிக்கும்.

4 comments:
வருக...அரவிந்தன்...தொடர்ந்து பல பதிவுகள் வழங்கவேண்டுமென... இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்..... தமிழ் மணத்திலும் கையோடு பதிந்து விடுங்கோ...
ஆஹா வந்தீட்டிங்களா, வாங்கோ
நன்றிகள் சின்னப்பு, கானா பிரபா
நன்றிகள் onfoyou
Post a Comment