எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, July 15, 2010

நியூசிலாந்து 11 - உலங்குவானூர்தியில் பயணம்

உலங்குவானூர்தி பறந்து வந்து எங்களுக்கு முன்னால் சில தூரத்தில் நின்றது. உலங்குவானூர்தியில் இருக்கும் சுற்றும் காத்தாடிச் செட்டைகளினால் ஆபத்து என்பதினால் எங்களை உடனடியாக உலங்குவானூர்திக்கு கிட்டச் செல்ல வழிகாட்டி அனுமதிக்கவில்லை. சில நிமிடங்களின் பின்பு உலங்குவானூர்தியில் ஏற அனுமதித்தார்கள்.

வானூர்தியில் 6 இருக்கைகள் இருந்தன. விமானியுடன், இன்னுமொருவர் துணையாக இருந்தார். இருவரும் பயணத்தின் போது விளக்கங்கள் தருவதாகச் சொன்னார்கள். இவ்வானூர்தியில் பிரான்ஸ் ஜோசப்பில் இருந்து ஏறிய இருவர் இருந்தார்கள். நாங்களும் வானூர்தியில் ஏறியவுடன் வழிகாட்டி திரும்பிச் சென்று விட்டார். உலங்குவானூர்தி பறக்கத் துவங்கியது.


மலை அடிவாரத்தில் தெரியும் Glacier

Glacier க்கு மேலாகப் பறக்கும் போது பார்த்தவை


மலைகளுக்கு மேலாகப் பறக்கும் போது பார்த்த முகில்களும், மலையில் படிந்த பனிக்கட்டிகளும் Glacierயும் நான் இணைத்த புகைப்படங்களில் இருந்து காணலாம்.





நான் இங்கு புகைப்படத்தில் இணைத்தவற்றை விட நேரில் அழகாக இருந்தது. வேறு ஒரு உலகத்தில் இருந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.






பயணத்தின் போது விமானியும், துணையாக வந்தவரும் நாங்கள் பார்த்த மலைகள், நீர் வீழ்ச்சிகள் பற்றிய விளக்கங்களைத் தந்தார்கள். தென் நியூசிலாந்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெரும்பாலான மலைகளையும் காண்பித்தார்கள். சில நிமிடப்பயணத்தின் போது மலை உச்சியின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது.

4 comments:

துளசி கோபால் said...

நியூஸியின் தெற்குத்தீவுதான் இயற்கை அழகில் முதலில் நிக்கும். (நானும் அங்கத்து மனுசிதான்)

க்ளேஸியரில் வெய்யில் ஊடுருவும்போது...... அடியில் ஒரு பச்சைகலந்த நீலம் தெரியுமே...... ஆஹா....... கவனிச்சீங்களா?

தொடர்ந்துவருகிறேன்.

நடுவில் கொஞ்சநாள் ஊரில் இல்லை. அதான் படிச்சாலும் பின்னூட்டமுடியலை:(

Aravinthan said...

உங்களின் ஆதரவுக்கு நன்றிகள் துளசி கோபால். நான் இணைத்த படங்களில் மேலிருந்து கீழ் 4வதாக அமைத்திருக்கும் படத்திலும் பச்சை கலந்த நீல நிறம் தெரிகிறது.

அமுதா கிருஷ்ணா said...

சூப்பராய் இருக்குது.எது முகில், எது பனி எனத்தெரியாமல்.இந்தியாவில் காஷ்மீர் இந்த ஏப்ரலில் சென்ற போது பனியினை பார்த்து வியந்து போனோம்.மிக அருமையான படங்கள்..

Aravinthan said...

வாசித்துக் கருத்துச் சொன்ன அமுதா கிருஸ்ணனுக்கு நன்றிகள். நேரம் கிடைக்கும் போது உங்களின் காஸ்மீர் அனுபவங்களை உங்களின் வலைப்பதிவில் படிப்பேன்.