எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, July 08, 2010

நியூசிலாந்து 8 -கொகிரிகா(Hokitika)


Shanty Townல் இருந்து வெளிக்கிட்டு அரை மணித்தியாலப் பயண முடிவில் மாலை ஆறு மணியளவில் அன்று இரவு தங்க உள்ள கொகிரிகா என்ற இடத்தை அடைந்தேன். விடுதியில் உடமைகளை வைத்து விட்டு கொகிரிகா நகரைப் பார்க்க விரும்பினேன்.விடுதியில் இரவு உணவை உண்ணுவதை விட வெளியிடங்களில் நல்ல சுவையான உணவை குறைந்த விலையில் உண்ணலாம்.

நகரத்தில் 3,4 வீதிகள் மட்டுமே காணப்பட்டன. பொதுவாக தென் நியூசிலாந்தில் கிறைஸ் சேர்ச், டனிடன் போன்ற சில நகரங்களைத் தவிர பெரும்பாலன இடங்களில் 3,4 வீதிகளே இருந்தன. கொகிரிகா நகரின் மத்தியில் பெரிய மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று இருந்தது. சனத்தொகையும் குறைவு.கடைகளும் குறைவு. இரவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. உணவகத்தில் உண்டபின்பு கடற்கரையில் பொழுதினைப் போக்கலாம் என நினைத்தேன். தென் நியூசிலாந்தில் முக்கிய நகரங்களைத் தவிர இரவில் வீதிகளில் பிரயாணிக்கும் போது மின்சார ஒளியினைக் காணமுடியாது. கொகிரிகாவில் ஆங்கில உணவகங்களே பெரும்பாலும் காணப்பட்டன. ஒரிடத்தில் ஒரு இந்தியா உணவகமும் இருந்தது. அங்கு அன்றைய உணவை உண்டபின் அருகில் உள்ள கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றேன்.



2 ம் நாள் பயணம்
2ம் நாள் இரவு வொக்ஸ் கிளேசியரில் தங்குவதாக வொக்ஸ் கிளேசியரில் உள்ள விடுதி ஒன்றில் முன் பதிவு செய்திருந்தேன்.இந்த 2005ம் ஆண்டுப் பயணத்தில் நான் வோக்ஸ் கிளேசியரும்(Fox Glacier), மில்வேட் ஒலியையும்(milford sound) பார்ப்பதற்கு ஏற்ப விடுதிகளைப் முன் பதிவு செய்திருந்தேன். அதிக நேரங்கள் வோக்ஸ் கிளேசியரில் செலவிட விரும்பினேன். இதனால் கொகிரிகாவில் அதிக நேரம் நிற்கவிரும்பவில்லை. இரண்டு மணித்தியாலம் பயணம் சென்றால் தான் வோக்ஸ் கிளேசியர் வரும். காலை உணவை கொகிரிகாவில் உண்டபின்பு வோக்ஸ் கிளேசியரை நோக்கிப் பயணித்தேன்.

No comments: