எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, August 07, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி9 -லீ லகுன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

Le Lagon Resortல் எல்லா நாட்களிலும் மாலை 6மணிக்கு கையில் தீ பந்தம் ஏந்தி வந்து விளக்குகளுக்கு ஒளி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.அதன் பிறகு வேறு ஒரு குழு வந்து மிருகங்களினை வேட்டையாடுவது போலக் கத்திக் கொண்டு மேள தளங்களுடன் ஆடுவார்கள்.வெளினாட்டு சுற்றுலாப்பயணிகளின் திருமணமும் Le Lagon Resortல் நடைபெறுவதுண்டு. மணப்பெண் அழங்கரிக்கப்பட்ட சிறு படகில் வந்து கரையில் இருக்கும் மணமகனை திருமணம் செய்வார்.


Le Lagon Resortல் காலையில் இருந்து இரவு வரை ஒவ்வொரு நாளும் எதாவது நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள், நேரம் பற்றி முதல் நாளே அறிவிப்பார்கள். தேங்காய் பிடுங்குவது எப்படி?, நண்டுகளுக்கிடையே ஒட்டப்போட்டி, BISLAMA மொழி கற்றல், வனு-அற்று கீதங்கள் படித்தல், தண்ணீரில் இருந்து வலைப்பந்தாட்டம் விளையாடுதல் என நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இரவு வெளிச்சத்தில் BISLAMA மொழிப்பாடல்கள் பாடிக்கற்கும் நிகழ்ச்சியினை இப்படத்தில் காண்கிறிர்கள்.


ஆங்கில மொழியும் - BISLAMA மொழியும்
Hello - Alo
Goodbye - Tata
Please - Plis
Good morning - Gud morning
Good night - Gud naet
Excuse me - Skiusmi
Thank you very much - Tank yu tumas
And - Mo
How much? - Hamas?
Do you have...? - Yu gat...?
I don't understand - Mi no savee
Child - Pikinini
Drunk - Fuldrong
Fish - Fis
See you - Lukim yu
I am very sorry - Sori tumas
What is your name? - Wanem nem blong yu?
My name is... - Nem blong mi...
Big - Bigfala
Food - Kae-kae
This food is delicious - Kae-kae emi gud
Drinking water - Kolwata
Seawater - Solwata
Seagull - Pigeon blong solwata
Excellent - Nambawan
I am hungry/thirsty - Mi wantem samting long kakae/dring
Call a doctor/police! - Singaot doctor/polis!
You must do good work every day - Yu mas makem gud work evri dai

2 comments:

Anonymous said...

ஆடுபவர்களைப் பார்த்தல் தென்னிந்தியர்களைப் போல இருக்கிறார்கள்.

Aravinthan said...

ஆடுபவர்கள் வனு-அற்று மக்கள்.