எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, July 03, 2012

நியூசிலாந்து 51 - ஆர்தர்பாசில் இருந்து ரிமாறு வரை

ஆர்தர்பாசில்(Arthur's pass) மதிய உணவினை முடித்துக் கொண்டு கிறைச் சேர்ச்சுக்கு(christchurch)போகாமல் Darfield வழியாக ரிமாறு(Timaru)நோக்கிப் பயணித்தோம்.
ஏற்கனவே முந்தைய பதிவுகளில் நான் ஆர்தர்பாஸ் பூங்காவின் அழகினைச் சொல்லியிருந்தேன். அந்த அழகினை இரசித்துக் கொண்டு வளைந்து நெளிந்து மலைகளினூடாகச் செல்லும் பாதைகளினூடாகப் பயணித்தேன். எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களினைப் பார்ப்பதினை விட நேரில் சென்று பார்க்கும் போது பலமடங்கு அழகாக இருப்பதாக உணர்வீர்கள்.
சொக்கலேற் நிறத்தில் காணப்படும் மலைத்தொடர்கள்.
நியூசிலாந்தின் மக்கள் தொகையினை விட அதிகளவில் காணப்படும் செம்மறியாடுகள்.
மாலை 6 மணியளவில் ரிமாறுவில் அன்று இரவு தங்கும் விடுதியினை அடைந்தோம். நவம்பர் மாதம் என்பதினால் நேரம் 6 மணியாகியும் இருளாமல் இருந்தது.

2 comments:

துளசி கோபால் said...

இப்போ ஆடுகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சு போயிருக்கு. மாடுகள் அதிகமா ஆகி இருக்கு.

Aravinthan said...

தகவலுக்கு நன்றிகள்.