எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, November 24, 2011

நியூசிலாந்து 42 -மால்பொரோ சவுண்ட்(Marlborough Sounds)

மால்பொரோ சவுண்டினூடாக(Marlborough Sounds) வெலிங்கடனில் இருந்து பிக்டனை நோக்கிக் கப்பலில் பயணிக்க வேண்டும். எனது நியூசிலாந்து அனுபவ இத்தொடரின் பகுதி 26ல் இருந்து 29 வரை மில்வேட் சவுண்ட்டில்(Milford Sound) பயணித்ததினை சொல்லியிருந்தேன். இரண்டு பயணங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது மில்வேட் சவுண்ட். அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டது மில்வேட் சவுண்ட்.
கப்பலில் ஒரு சிறிய திரை அரங்கும் இருந்தது. அங்கு திரையிடப்படும் திரைப்படத்தினைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் விளையாட சிறு விளையாட்டு இடம், உணவகம், கடை , இணையம் என பல வசதிகளை செய்திருந்தார்கள்.

2 comments:

துளசி கோபால் said...

சிலசமயம் ஸ்வெல்லிங் அதிகமிருந்தால் கப்பல் எக்கச்சக்க ஆட்டம் போட்டு பயண சுவாரசியத்தையே கெடுத்துவச்சுரும்:(

Aravinthan said...

பயண சுவாரசியத்தினைக் கெடுப்பதுடன் சில வேளை வாந்தி(சத்தி) போன்றவற்றினை பயணிகள் எடுக்கலாம். எனக்கு சிட்னியில் இருந்து 3 மணித்தியாலத்தில் இருக்கும் Jarvis Bay என்ற கடலில் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது