விமானம் இரவு 11. 30 க்கு வெலிங்டன் விமான நிலையத்தினை அடைந்தது. முன்பு பாடசாலையில் படிக்கும் போது சமுகக்கல்வி ஆசிரியர் ஒருவர் வெளினாட்டு நகரங்களின் பெயர்களை சொல்லுமாறு வகுப்பில் கேட்க நானும் சிட்னி, வெலிங்டன், இலண்டன் என்று பதில் அளிக்க ஆசிரியர் இவனுக்கு எப்ப பார்த்தாலும் சினிமா ஞாபகம் தான் என்று திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த வெலிங்டன் திரையரங்கினைத் தான் சொல்கிறேன் என்று அவர் நினைத்திருந்தார். நான் துடுப்பாட்டப் போட்டிகளின் செய்திகளை ஆர்வமாகப் பார்க்கும் பழக்கம் இருப்பதினால் துடுப்பாட்டம் நடைபெறும் இடங்களில் ஒன்றான நியூசிலாந்தின் தலை நகர் வெலிங்கடனையும் எனக்கு தெரிந்த நகரங்களில் ஒன்றாக அப்பொழுது சொன்னேன்.
விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு செல்ல இரவு 12.30 மணியாகிவிட்டது. மறு நாள் அதிகாலையில் எழும்பி வெலிங்டன் துறை முகத்தினை நோக்கிப் பயணித்தேன். ஏற்கனவே சிட்னியில் இருக்கும் போது ,கப்பலில் பயணிக்க முன் பதிவு செய்திருந்தேன். நான் பதிவு செய்த கப்பல் 10.25 மணியளவில் தான் தென் நியூசிலாந்தில் உள்ள பிக்டன்(Picton) நகரினை நோக்கிப் பயணிப்பதாக இருந்தது. கப்பல் பயணிக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்பாகவே(9.40) பயணிகள் துறைமுகத்தில் நிற்க வேண்டும். கப்பலில் வாகனத்தினை ஏற்றி செல்லும் போது வாகனத்துக்கு மேலதிகமாக பணம் கட்ட வேண்டும். வாடகைக்கு வாகனத்தினை வெலிங்டன் விமான நிலையத்தில் முதல் நாள் இரவு எடுத்திருந்தேன். கப்பல் துறை முகத்திலே வாகனத்தினை திருப்பி தருவதாகவே பதிவு செய்திருந்தேன். இந்த நியூசிலாந்து சுற்றுலாவில் மொத்தம் 8 நாட்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்றிருக்கலாம். ஆனால் அப்படி செல்வதிலும் பார்க்க வெலிங்டன் விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் துறைமுகத்துக்கு செல்ல ஒரு வாகனத்தையும், பிக்டன் துறை முகத்தில் இருந்து 7 நாட்கள் தென் நியூசிலாந்தினைப் பார்த்த பின்பு மறு படியும் பிக்டன் துறை முகத்துக்கு செல்ல 2 வது வாகனத்தினையும், வெலிங்டன் துறைமுகத்தில் இருந்து மறு நாள் வெலிங்டன் விமான நிலையம் வரை செல்ல 3வது வாகனத்தினையும் பதிவு செய்தேன். கப்பலில் வாகனத்தினை கொண்டு செல்வது அதிக பணம் என்பதினால் இவ்வாறு பதிவு செய்தேன். பொதுவாக நான் Hertz,Avis, Europcar போன்றவர்களிடம் தான் வாடகை வாகனங்களினைப் பெறுவதுண்டு. இவற்றினை வாடகைக்கு எடுப்பதினால் Air miles pointsனை பெறலாம். அத்துடன் ஒரு இடத்தில் வாடகைக்கு வாகனத்தினை எடுத்தால் வேறு இடங்களில் உள்ள அவ்வாகனநிலையங்களில் அவ்வாகனத்தினை திருப்பிக் கொடுக்கலாம்.
வெலிங்டனில் இருந்து பிக்டன் வரை Interislander ,bluebridge என்ற இரண்டு கப்பல்கள் பயணிக்கின்றது. நான் Interislander தான் பயணித்தேன்.
நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருந்து 3 மணித்தியாலம் கப்பலில் பயணித்தால் தான் தெற்கு தீவின் உள்ள பிக்டன் நகரை அடையலாம்.
வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்லும் போது, கடைசி ஒரு மணித்தியாலம் புகழ் பெற்ற Marlborough Sounds என்ற பிரதேசத்திற்கூடாக பயணிக்க வேண்டும்.
4 comments:
நிறைய டால்ஃபின் மீன்கள் கப்பலின் மேல்தளத்தில் நின்னால் பார்க்கக் கிடைக்குமே!
படங்கள் அருமையா வந்துருக்கு.
நானும் நியூஸி திரும்பிட்டேன் நாலு மாசங்களுக்கு முன்.
வெலிங்டன் அருங்காட்சியத்தில் பழமையான கப்பல் மணி ஒன்று இருக்கும் முடிந்தால் பார்வையிடுங்கள்.
http://www.teara.govt.nz/en/sri-lankans/1/3
துளசி கோபால் said...
நிறைய டால்ஃபின் மீன்கள் கப்பலின் மேல்தளத்தில் நின்னால் பார்க்கக் கிடைக்குமே!
படங்கள் அருமையா வந்துருக்கு.
நானும் நியூஸி திரும்பிட்டேன் நாலு மாசங்களுக்கு முன்.
--------------------
வாசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் கிரைஸ் சேர்ச்சில் பயமில்லாமல் திரும்பி வாழ்வதற்கு தைரியம் தான் வேண்டும்.
Rameswaramrafi said...
வெலிங்டன் அருங்காட்சியத்தில் பழமையான கப்பல் மணி ஒன்று இருக்கும் முடிந்தால் பார்வையிடுங்கள்.
http://www.teara.govt.nz/en/sri-lankans/1/3
--------------
தகவலுக்கு நன்றிகள். மிகவும் பிரயோசனமான தகவல். அடுத்த முறை வெலிங்டன் செல்லும் போது நிச்சயம் செல்வேன்.
Post a Comment