எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, August 25, 2010

நியூசிலாந்து 21- Kawarau Jetல் படகுப்பயணம்

4ம் நாள் பயணம்
எனது பயணத்தின் போது தங்கியிருந்த விடுதிகளில் காலை உணவினை உண்பதற்கு மேலதிகமாக 10 - 20 நியூசிலாந்து வெள்ளிகள் கொடுக்கவேண்டும். அப்பணத்தினை விட குறைந்த பணத்துக்கு வெளியில் உள்ள உணவகங்களில் சுவையான உணவுகளை உண்ணலாம் என்பதினால் காலை உணவினை பயணத்தின் போது வெளியில் உள்ள உணவகங்களில் உண்டேன். ஆனால் நான் தங்கியிருந்த குயின்ஸ்டவுன் விடுதியில் தங்குமிட வாடகையுடன் காலை உணவினையும் தந்தார்கள்(அதாவது காலை உணவு இலவசம்). காலை உணவினை விடுதியில் உண்டபின்பு( இதே விடுதியில் தான் நான் 5ம் நாள் பயணமுடிவில் தங்கினேன்)Kawarau Jet என்ற வேகமாகச் செல்லும் படகில் செல்லும் இடத்துக்கு புறப்பட்டேன். இதற்கான நுளைவுச்சீட்டினை ஏற்கனவே 3ம் நாள் இரவு குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் வாங்கியிருந்தேன். சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

மேலே உள்ள படம் விடுதியில் இருந்து படகு வெளிக்கிடும் இடத்துக்கு செல்லும் போது எடுக்கப்பட்டது.

சிட்னியில் இருக்கும் போது, குயின்ஸ்டவுனில் சென்றால் Shotover Jet என்ற வேகப்படகில் செல்லத்தான் விரும்பியிருந்தேன். பல்வேறு விளம்பரங்களில், காணொளிகளில் இப்படகுப் பயணம் பற்றிச் சொல்லி இருந்தார்கள். ஆனால் குயின்ஸ்டவுனில் நான் சென்ற சுற்றுலா தகவல் மையத்தைச் சேர்ந்தவர்கள், Kawarau Jet படகுப்பயணம் நன்றாக இருக்கும். Shotover Jet விட நீண்ட தூரமும், அதிக நிமிடங்களும் Kawarau Jetல் பயணிக்கலாம். அத்துடன் Kawarau Jet படகில் பிராயணித்து முடிந்ததும், கடலின் அடியில் சுற்றிவர கண்ணாடியினால் அமைக்கப்பட்ட அறைக்கு கூட்டிச் செல்வார்கள். அவ்வறையில் இருந்து கடலினுள் தெரியும் மீன்கள், கடல் வளங்களைப் பார்க்கலாம். அத்துடன் இரு படகுப்பயணச்சீட்டின் விலைகளில் Kawarau Jetவின் விலைதான் குறைவு என்றும் சொன்னார்கள். இதனால் தான் நான் Kawarau Jetனைத் தெரிவு செய்தேன். ஆனால் Kawarau Jet படகில் செல்வதினை விட Shotover Jet படகில் செல்வது தான் நன்றாக இருக்கும் என்று நான் தங்கியிருந்த குயின்ஸ்டவுன் விடுதியில் வேலை செய்பவர்களில் ஒருவர் சொன்னார்.

படகு வெளிக்கிடும் இடத்துக்கு சென்ற போது நேரம் கிட்டத்தட்ட காலை 8 மணியாக இருந்தது. காலை 9மணிக்கு Kawarau Jetல் பயணிக்க முன்பதிவு செய்ததினால்,நேரம் இருப்பதினால் அருகில் இருக்கும் குயின்ஸ்டவுனில் உள்ள கடைகள் இருக்கிற இடங்களுக்குச் சென்று வரத்தீர்மானித்தேன்.



9மணிக்கு முன்பாகவே படகுப் பிரயாணம் ஆரம்பிக்கும் இடத்துக்கு சென்றோம். நீர் உட்புகாத மேலாடையினை(Rain coats jacket)அணியத்தந்தார்கள். புகைப்படங்கள் எடுத்தார்கள். படகில் ஏறி அமர்ந்ததும் மறுபடியும் படங்கள் எடுத்தார்கள். கீழே உள்ள படகில் தான் நான் பிரயாணித்தேன். இப்படகில் நான் இருக்கிறேன். சிவப்பு நிற மேலாடை அணிந்தவர் தான் படகோட்டி.
படகுப்பயணம் முடிய விருப்பம் இருந்தால் படங்களைக் காசு கொடுத்து சுற்றுலாப் பயணிகள் வாங்குவார்கள். சென்ற பதிவில் நான் பதிந்த, நான் சென்ற குயின்ஸ்டவுன் கொண்டலாவிலும் புகைப்படம் எடுத்தார்கள். பயண முடிவில் படங்களைப் பெற்றுக் கொண்டோம். நியூசிலாந்தில் பெரும்பாலான முக்கிய சுற்றுலாக்களில் சுற்றுலாப் பயணிகளை இப்படிப் படம் பிடிப்பார்கள்.
படகில் செல்லச்செல்ல பயங்கர குளிராக இருந்தது. நீர் உட்புகாத ஆடை அணிந்திருந்தாலும் வேகமாகச் செல்லச் செல்ல ஏரி நீர் முகத்தில் அடிக்க முகம் குளிராக இருந்தது. அத்துடன் கைகளினால் படகின் கம்பியினைப் பிடிக்கும் போது குளிரினால் கை விரைக்கத் தொடங்கியது. நான் 2005 செப்டம்பர் மாதம் இறுதிக் கிழமைகளில் இந்த நியூசிலாந்துப் பயணத்தை மேற்கொண்டேன். அவ்வருடத்தில் அக்டோபர் மாதம் 1 ம்திகதி தான் கோடைகால நேரமாற்றம் செய்திருந்தார்கள். வேகமாகச் சென்ற படகு 180 பாகையில் வேகமாக திரும்பி பிரயாணித்தது.





கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் படகு வேகமாக மலைகளின் அருகிலும், செடி, கொடிகளின் கீழாகவும் பிரயாணித்தது.

No comments: