எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, August 11, 2010

நியூசிலாந்து 15 -வானகா ஏரி( Wanaka Lake)

காஸ்ட் வீதிகளில் மக்களும் வாகனங்களும் மிக மிகக்குறைவாகக் காணப்பட்டன.நான் காஸ்டுக்கு சென்ற போது, விடுதியுடன் சேர்ந்த ஒரே ஒரு உணவகம் மட்டும் அங்கே இருந்தது. ஆனால் காலை 11 மணிக்கு அவ்வூணவகம் முடப்பட்டிருந்தது. மணிக்குப் பிறகு தான் அவ்வுணவகத்தைத் திறப்பார்கள் என்று அறிந்தேன்.அதனால் அங்கே உள்ள ஒரே ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்து விசுக்கோத்துக்களை வாங்கி உண்டு விட்டு,எரிபொருள் நிலையத்தில் வாகனத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டு வானகா(Wanaka) நோக்கி பயணித்தேன்.பொதுவாக முக்கிய பிரதான நகரங்களை விட மற்றைய நகரங்களில் பெற்றோலின் விலை அதிகம்.காஸ்டிலும் பெற்றோலின் விலை மிக அதிகமாக இருந்தது.காஸ்ட்டில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலிய வெள்ளைக்காரர் ஒருவர் அண்மையில் நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அவர் காஸ்டில் ஒரு நாள் இரவில் தங்கியதாகவும், அந்த நகரில் அன்று பொழுது போக்குவதற்கு ஒன்றுமில்லாதினால் வெறுத்துப் போனதாகவும், நியூசிலாந்துப்பயணத்தில் தனக்குப்பிடிக்காத இடம் காஸ்ட் என்றும் சொன்னார். காஸ்டில் (Haast) இருந்து வானகா(Wanaka)வரை ஒன்றேமுக்கால் மணித்தியாலம் பிரயாணம் செல்லவேண்டும்.

இப்பிரயாணத்தில் மிகவும் அழகான மலைகளையும், ஏரிகளையும் பார்த்து இரசித்தேன்.தொடர்ந்து பயணிக்கும் போது விதியின் அருகில் வானகா ஏரியினைக்( Wanaka Lake) காணலாம்.காஸ்டில் இருந்து வானகாவுக்கு செல்லும் போது வீதியின் வலதுபக்கத்தில் வானகா ஏரியினைக் காணலாம்.

2 comments:

துளசி கோபால் said...

படங்களைப்பார்த்து ரொம்ப ஹோம்சிக்கா இருக்கேன்.

லேக் வானகா டவுனில் ஒரு பஸ்லிங் வொர்ல்ட் இருக்கு. அங்கே உள்ள 3D Maze ரொம்ப பிரசித்தம்.
நானும் மகளும் பலமுறை முயன்றும் காணாமப் போயிருவோம்.

கணவர்தான் அங்கே இருக்கும் மரக்கோபுரத்தில் ஏறி நின்னு வழி சொல்லுவார்:-)))))

இது இல்லாமல் கட்டிடத்துலே அநேக விளையாட்டுகள் இருக்கு. நிம்மதியா உக்காந்து பஸுல் சால்வ் செய்யலாம்.

வருசத்துக்கொரு முறை இந்த வானகா ஏரிக்குப் பக்கம் ஏர்ஷோ நடக்கும்.

Aravinthan said...

தொடர்ந்து வாசித்துக் கருத்துக்கள் , அனுபவங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள் துளசி கோபால் . நானும் பஸ்லிங் வொர்ல்ட்க்கு சென்றிருக்கிறேன். வரும் பதிவுகளில் எனது அனுபவங்களைச் சொல்லுவேன்.