எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, December 05, 2012

நியூசிலாந்து 62 -கிறைஸ்சேர்ச்சில் இருந்து கைக்கோரா(Kaikoura)வை நோக்கிய பயணம்

மறு நாள் காலை எழுந்ததும் கிறைச் சேர்ச்சில் இருந்து கைக்கோரா(Kaikoura)வை நோக்கிப் பயணித்தோம். Waipara, Hanmer Springs , Kaikoura ஆகிய இடங்களை இணைக்கும் முக்கோணப் பாதைக்கு 'Alpine Pacific Triangle' என்று அழைக்கிறார்கள்.
இம்முக்கோணப் பாதையில் இருக்கும் நகரில் ஒன்றான கன்மர் ஸ்பிரிங்(Hanmer Springs ) சென்றதினை நான் நியூசிலாந்து பகுதி 38,39,40ல் சொல்லியிருந்தேன். அதாவது கிறைஸ் சேர்ச்சில் இருந்து இந்த முக்கோணப் பாதையில் அமைந்திருக்கும் நகரில் ஒன்றான Waipara வழியாக வடமேற்கு திசையில் இருக்கும் Hanmer Springs சென்றதினை விபரித்து இருக்கிறேன். இம்முறை கிறைச்சேர்ச்சில் இருந்து Waipara வழியாக வடகிழக்கு திசையில் இருக்கும் Kaikoura நோக்கிப் பயணித்தேன். கிறைஸ் சேர்ச்சில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் கைக்கோராவை அடையலாம்.
காலை 8 மணியளவில் கைக்கோராவை நோக்கிப் பயணித்தோம்.
நியூசிலாந்தில் மக்கள் தொகையினைவிட அதிகமாக மாடுகளும் செம்மறியாடுகளும் இருக்கின்றன.
மஞ்சள் நிறப்பூக்களினால் அழகாகக் காணப்பட்ட மலைகள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலப் பயண முடிவில் அழகான கடற்கரை கண்ணில் பட்டது. கைக்கோராவை நோக்கிப் பயணிக்கும் பாதையும் கடற்கரையின் அருகில் இருந்ததினால் அழகான கடலை இரசித்துக்கொண்டு பயணித்தோம்.
மலையைக்குடைந்து வீதி அமைத்திருக்கிறார்கள்.

2 comments:

துளசி கோபால் said...

நியூஸியில் நகரைவிட்டு விலகிப் பயணப்படும்போது அந்த ட்ரைவே ரொம்ப அழகா இருக்கும். எங்கோ எப்போதோ ஒரு மனிதர் கண்ணில்பட்டால் அதிசயம்.

கைக்கோரா விவரிப்புக்குக் காத்திருக்கின்றேன்.

Aravinthan said...

தொடர்ந்து எனது பதிவுகளை வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.