எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, January 12, 2012

நியூசிலாந்து 44 - பிக்டனில் இருந்து ரிவாக்கா வரை

பிக்டனில் இருந்து கவ்லொக் நோக்கி Queen Charlotte Drive வீதி வழியாக பயணித்தேன். Queen Charlotte Driveல் பயணிக்கும் போது அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளில் பயணிக்கும் போது வாகனங்களை நிற்பாட்டி இயற்கை அழகினை இரசித்துப்பார்ப்பார்கள். இருள முதல் மொற்று எகாவிற்கு செல்ல வேண்டும் என்பதினால் ஒரிரு இடங்களிள் மட்டும் வாகனத்தினை நிற்பாட்டி புகைப்படங்களை எடுத்தேன்.
கவ்லொக்கினை அடைந்ததும் நெல்சனை நோக்கிப் பயணித்தோம்.
நெல்சனிலும் பார்ப்பதற்கு, சுற்றுலா செல்வதற்கு சில இடங்கள் இருக்கின்றன. நெல்சனை அடையும் போது மாலை 5.30 ஆகிவிட்டது. அங்கே இருந்த தாய்லாந்து உணவகமொன்றில் இரவு சாப்பாட்டினை வாங்கிக் கொண்டு மொற்று எகா நோக்கிப் பயணித்தோம். நாங்கள் அன்றைய இரவில் தங்க முன்பதிவு செய்த விடுதி மொற்று எகாவின் அருகில் இருக்கிற ரிவாக்கா (Riwaka)என்ற இடத்தில் உள்ளது.
நெல்சனில் இருந்து 45 நிமிட பயணதூரத்தில் தான் மொற்று எகா இருக்கின்றது. மேலும் 10 நிமிடங்கள் பயணித்தால் ரிவாக்கா என்ற இடம் வரும். ரிவாக்காவில் இருந்து 7,8 நிமிட தூரத்தில் Marahau என்ற இடம் இருக்கின்றது. இங்குதான் மறு நாள் நான் படகுப் பயணம் செய்யும் அபில் தஸ்மன் பூங்கா ஆரம்பிக்கின்றது. Marahau என்ற இடத்தினை அபில் தஸ்மன் கிராமம் என்றும் சொல்லுவார்கள்.
ரிவாக்காவினை அடையும் போது 6.30 ,7 மணியாகிவிட்டது. ஆனால் விடுதி இருக்கும் வீதியைக் காணமுடியவில்லை. வீதியில் செல்பவர்களைக் கேட்டுப் பார்த்து, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் ஒருவாறு விடுதியினைக் கண்டுபிடித்தோம்.

No comments: