எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, February 10, 2010

இலவசமாக விமானத்தில் நீங்களும் பயணிக்கலாம்


பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விடயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விடயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். இலவசம் என்றால் விமானச்சீட்டுத்தான்(Airline Ticket) இலவசம். வரி(Tax) மட்டும் நாங்கள் கட்டவேண்டும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர் எயர்லான்ஸில் பிரயாணம் செய்வதினாலும் அல்லது அதன் சக விமானங்களில்( Star Alliance Partners - Air Canada, Air Newzealand,Air China, ANA, Asiana Airlines, United Airlines,Thai Airlines, Lufthansa,SAS, BMI, Austrian Airlines, South African Airlines, Swiss, US Airways, Tap Portugal, SpanAir,ADRIA,Croatia Airlines,Egyptair,Brussels Airline,LOT Polish Airline,Turkish Airline,Shangai Airlines, other airlines - Virgin Atlantic, Mexicana, Silk Airlines) பிரயாணம் செய்வதினாலும், பிரயாணிக்கும் மைல்களில் அளவுக்கு சமனான புள்ளிகள் கிடைக்கும். (Business, First Classல் பயணிக்கும் போது கூடபுள்ளிகள்)

சிட்னியில் இருந்து நியூயோக் அல்லது சிட்னியில் இருந்து இலண்டன் செல்ல கிட்டத்தட்ட 20000 புள்ளிகள் கிடைக்கும். சிட்னியில் இருந்து கொழும்பு செல்ல கிட்டதட்ட 11000 புள்ளிகள் கிடைக்கும். அதாவது பயணிக்கும் மைல்களின் அளவுக்கு சமமாக புள்ளிகள் கிடைக்கும்.

குறிப்பிட்ட தங்குமிடங்களில் தங்குவதினாலும் (உ+ம் Accor ,Hilton )புள்ளிகள் பெறலாம்

Avis,Hertz போன்ற மகிழுந்துகளை வாடகைக்கு பெறுவதினாலும் புள்ளிகள் பெறலாம்

சிங்கப்பூரில் Shell பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடிக்கும் போதும், சிங்கப்பூர் எயர்லைன்ஸில் பிரயாணம் செய்யும் போது பொருட்களை வாங்கும் போதும் புள்ளிகள் பெறலாம்.
இன்னும் பல வழிகளில் புள்ளிகளைப் பெறலாம்.

25000 புள்ளிகள் கிடைக்கும் போது சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு சென்று வர இலவச வீமானச் சீட்டினைப் பெறலாம். ஆனால் சேர்க்கும் இப்புள்ளிகள் 3 வருடத்தில் முடிவடைந்து விடும். முடியமுன்பு இப்புள்ளிகளுக்கு ஏற்ப வீமானச் சீட்டுக்கள் வாங்க வேண்டும். தற்பொழுது சில விமானங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லத்(oneway) தேவையான புள்ளிகளிலும் இலவச (oneway) பயணம் செய்யலாம்.சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு Air Newzealandல் சென்று வர 12500 புள்ளிகள் தேவை.இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது.

சிட்னியில் இருந்து 'Kris Flyer ' ல் உள்ள விமானங்களில் வேறு இடங்களில் நிற்காமல் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரே ஒரு விமானம் ' Air Newzealand' . இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், ரொட்டுறுவா,வெலிங்டன் போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கு பறக்கிறது.

நான் சிங்கப்பூர் எயர்லைன்சில் பிரயாணம் செய்வதினால் 'KrisFlyer ' பெறுவது போல, நீங்களும் வேறு சில விமானங்களின் மூலம் புள்ளிகள் பெறலாம். (Frequent Flyer points - Qantas,British Airways,American Airlines,Cathay Pacific,Japan Airlines...... )

Virgin Blue மூலம் பெறப்படும் புள்ளிகள் Velocity Points ஆயூள் வரைக்கும் பாவிக்கலாம்

என்னிடம் Frequent Flyer ,Velocity Pointsம் இருக்கிறது. ஆனால் நான் அதிகம் Star Alliance விமானங்களில் தான் பயணிப்பதுண்டு.

நான் 3 முறை நியூசிலாந்துக்கு இலவசப்பயணம் செய்திருக்கிறேன். 2005ல் முதல் முறையாக சென்ற போது பார்த்தவற்றை யாழ் இணையத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.(2008,2009லும் நான் இலவசப்பயணம் செய்திருக்கிறேன்). அவ்வனுபவத்தை எனது வலைப்பதிவினூடாக உங்களுடன் இனி வரும் பதிவுகளுடன் பகிரவுள்ளேன்.

2 comments:

எழிழன் said...

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in