எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 31, 2009

வனுவாட்டு - பகுதி25 - எரகொர்(ERAKOR ) குடா

நான் தங்கியிருந்த லீ லகுன் விடுதிக்குப் பக்கத்தில் இருக்கும் எரகொர் குடாவின்(ERAKOR) நடுவில் இருக்கும் சிறு தீவில் அமைந்திருப்பது ERAKOR ISLAND RESORT.


இத்தீவிற்கு இலவசப்படகின் மூலம் தான் செல்ல முடியும். ஈவெட் தீவில் இருந்து அருகில் இருக்கும் பல சிறு தீவுகளுக்கு செல்ல இலவசப்படகுச் சேவைகள் நடைபெற்று வருகிறது.

இத்தீவின் கரைகளில் பச்சை நிறத்தில் உயிருள்ள சோகிகளினக் கண்டேன்.

கரையோடு அண்மித்த பகுதியில் உள்ள குடாவில் உள்ள நீர்களில் சிறு சிறு மீன்களையும் கண்டேன்.


மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட Erakor குடாவின் கரையோரங்களின் புகைப்படங்கள்


வனுவாட்டு என்ற நாட்டிற்கு 2006ல் பயணித்த போது ஏற்பட்ட அனுபவங்களை யாழ் இணையத்தளத்தில் எழுதியிருந்ததை எனது வலைப்பதிவினூடாக உங்களுடன் இதுவரை காலமும் பகிர்ந்திருந்தேன்.

எனது வனுவாட்டு அனுபவப் பதிவினை வாசித்தவர்களுக்கும், வாசித்து கருத்துக்கள் பகிர்ந்தவர்களுக்கும் நன்றிகள். அடுத்த பதிவில் இருந்து 2005ம் ஆண்டில் நான் நியூசிலாந்து சென்ற போது பார்த்தவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

No comments: