எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, June 14, 2012

நியூசிலாந்து 49 - எத்தனை முறை சென்றாலும் கவரும் புனாகைகிப் பாறைகள்

'Murchison swingbridge'ல் இருந்து Inangahua ,Reefton நகரங்களினூடாக கிறேமவுத்தினை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம்.
ஆள் அரவமற்ற பாதைவழியாக மழையின் தூறலின் மத்தியில் பயணித்து கிட்டத்தட்ட மாலை 6 மணியளவில் கிறேமவூத்தினை அடைந்தோம்.
கிறேமவூத்தில் இருக்கும் இந்திய உணவகமொன்றில் அன்றைய இரவு உணவினை வாங்கி உண்டபின்பு, அன்று இரவு தங்கும் விடுதியை அடைந்தோம்.
மறு நாள் காலையில் அன்று இரவு தங்கும் ரிமாறு(Timaru) என்ற இடத்திற்கு செல்ல ஆயத்தப்படுத்தினேன். கிறைச் சேர்ச்சில்(Christchurch) இருந்து தெற்காக 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் பயணித்தால் ரிமாறுவினை அடையலாம்.
ஆனால் கிறேமவுத்தில்(Greymouth) இருந்து கிழக்கில் இருக்கும் கிறைச் சேர்ச் செல்ல 3 மணித்தியாலம் தேவை. கிறைச் சேர்ச் செல்லாமல் இடைவெளிப்பாதையினால் ரிமாறு செல்ல 4.30 மணித்தியாலம் தேவை.
என்னுடன் இம்முறை சிட்னியில் இருந்து பயணித்தவர்கள் 2005ல் நியூசிலாந்துக்கு என்னுடன் சுற்றுலா செல்லவில்லை. அவர்கள் புனாகைகிப்(Punakaiki) பாறைகளைப் பார்க்க விரும்பினார்கள். புனாகைகிப் பாறைகள் கிறேமவுத்தில் இருந்து வடக்கு நோக்கி 30 நிமிடப்பயணம் செல்ல வேண்டும். புனாகைகிப் பாறைகளைப் பார்த்து விட்டு ரிமாறு செல்ல 5.30 மணித்தியாலப் பயணம் செய்ய வேண்டும்.
என்றாலும் என்னுடன் பயணித்தவர்கள் விரும்பியதினால் மறுபடியும் புனாகைகி பாறைகளை நோக்கிப் பயணித்தேன். 2005ல் சென்ற போது பார்த்தவற்றை நியூசிலாந்து-5, நியூசிலாந்து -6 பகுதியில் எழுதியிருக்கிறேன். அம்முறை சென்ற போது மழை பெய்து கொண்டிருந்ததினால் புனாகைகி பாறைகளை அவசர அவசரமாகப் பார்த்தேன். இம்முறை காலநிலை நன்றாக இருந்தது. விடுதியில் இருந்து புனாகைகிப் பாறைகளை நோக்கிப் பயணித்தேன்.
புனாகையினை அடைந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி பாறைகள் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.
அழகாக காட்சி அளிக்கும் புனாகைகிப் பாறைகள்.
ஒடுக்கமான பாதைகளினூடாக நடக்க வேண்டும்
2005ல் சென்ற போது மழை பெய்ததினால் ஓடி ஒடிப் பார்த்தேன். இம்முறை ஆறுதலாக சென்று பார்த்து இரசித்தேன். இம்முறை பார்க்கும் போது புதிதாகப் பார்ப்பது போல பிரமிப்பாக இவ்விடம் இருந்தது. எத்தனை முறை சென்றாலும் கட்டாயம் நியூசிலாந்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று புனாகைகிப் பாறைகள். நியூசிலாந்து-5, நியூசிலாந்து -6 பகுதியில் புனாகைகிப் பாறைகளைப் பற்றி நான் விபரமாகச் சொன்னதினால் இப்பகுதியில் இப்பாறைகளைப் பற்றி விபரிக்கவில்லை.

2 comments:

துளசி கோபால் said...

இந்தப் பாறைகளுக்கு Pancakes rocks என்ற ஒரு பெயரும் உண்டு.

தோசைகளைச் சுட்டு ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கி வச்சது போல இருக்கும்.

நல்ல tides சிருக்கும் சமயம் blow holes வழியாக க் கடல் நீர் ஊற்றுப்போல் முப்பது நாப்பது மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும். பார்த்தீர்களா?

Aravinthan said...

பார்த்திருக்கிறேன். தகவல்களுக்கு நன்றிகள். ஏற்கனவே 2005ல் இவ்விடம் சென்ற போது பார்த்தவற்றை முந்தைய பதிவுகளில் எழுதி இருந்ததினால் இம்முறை நான் விபரமாக எழுதவில்லை.