எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, March 29, 2012

நியூசிலாந்து 47- Awaroaல் இருந்து கைத்தேரிதேரி வரை படகுப்பயணம்

காலை 9.15 க்கு கைத்தேரிதேரி(Kaiteriteri)யில் இருந்து வடக்கு நோக்கி வெளிக்கிட்ட படகு Marahau, Torrent Bay, Bark Bay , Onetahuti இடங்களினூடாக பயணித்து காலை 10.45 மணியளவில் Totaranuiயை அடைந்தது. அங்கு சிலர் படகில் இருந்து இறங்கினார்கள். அவர்களை இறக்கிவிட்டு வந்த வழியில் திரும்பி தெற்கு நோக்கி கைத்தேரிதேரி(Kaiteriteri) நோக்கி படகு புறப்பட்டது. காலை 11 மணியளவில் படகு 'Awaroa' என்ற இடத்தினை அடைந்தது. (கைத்தேரிதேரி(Kaiteriteri)யில் இருந்து வடக்கு நோக்கி படகு பயணித்த போது 'Awaroa'யில் படகு நிற்கவில்லை.)
படகில் இருந்து இறக்கி சில நிமிடங்கள் கடற்கரையின் அழகினை இரசித்தோம்.
சிலர் 'Awaroa'வில் ஒற்றையடிப்பாதையினூடாக நடக்க, நாங்கள் படகுக்கு திரும்பினோம். படகு தெற்கு நோக்கி(கைத்தேரிதேரி ) பயணித்தது. போகும் போது சில பாறைகளின் மேலே பென்குயின் பறவைகள் ஒய்வெடுப்பதினை பார்த்தோம்.
'Cottage loaf rock' என்ற பெரிய பாறை( நியூசிலாந்து 46)யினை மீண்டும் கண்டோம்.
தொடர்ந்து பயணிக்கும் போது வேகப்படகில் போட்டியிடும் வீரர்களைக் கண்டோம்.
கடல்சிங்கங்களையும் (Sea Lion) பாறைகளில் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்..
இன்னுமொரு கடற்கரையில் படகு நிற்க சிலர் இறங்கி நடந்தார்கள். அவர்கள் இறங்கியதும் எமது படகு பயணிக்க தொடங்கியது.
இன்னுமொரு படகு
கடலில் ஒரு சிறு தீவு
கடல்சிங்கம்
மதியம் 12 மணியளவில் படகு கைத்தேரிதேரியை அடைந்தது.

2 comments:

துளசி கோபால் said...

அருமை! இந்தப் பகுதி படகுப்பயணம் போனதில்லை. கைத்தேரிதேரி கோல்டன் சாண்ட்ஸ் பீச் வரைதான் போனோம்.

Aravinthan said...

வாசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்