எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, August 15, 2011

நியூசிலாந்து 39 - கன்மர் ஸ்பிரிங் (Hanmer Springs )

கிறைஸ் சேர்ச்சில் இருந்து கன்மர் ஸ்பிரிங் நோக்கிய பயணத்தில் கன்மர் ஸ்பிரிங்க் கிட்டப் பயணிக்கும் போது 'Waiau Gorge' என்ற இடத்தில் ஒரு பாலத்தின் கீழ் பயணிக்க வேண்டும். பாலத்தின் கீழ் ஆறு ஒன்று ஒடிக்கொண்டிருந்தது.


அந்த ஆற்றில் வேகப்படகில் (Jet Boat) பயணிக்கலாம். அத்துடன் 'Bungy Jump' போன்றவற்றையும் செய்யலாம்.
நான் குயின்ஸ்டவூனில் இரண்டு வேகப்படகில் சென்றதினை (நியூசிலாந்த்து பகுதி -21,22) விபரித்திருக்கிறேன். சிட்னியிலும் வேகப்படகில் சென்றிருக்கிறேன். இதனால் நான் இங்கு பயணிக்க விரும்பவில்லை. அத்துடன் படகில் செல்ல கட்டணம் 99 நியூசிலாந்து வெள்ளிகள் செலுத்த வேண்டும். என்னுடன் வந்த உறவினர்களில் சிலர் படகில்சென்றார்கள். படகோட்டி ஏன் இப்படகில் நான் வரவில்லை சென்று கேட்டார். நான் குயின்ஸ்டவூனில் சென்றிருக்கிறேன் என்றேன். அங்கு சென்றதினை விட இங்கு பயணம் நன்றாக இருக்கும். நீண்ட தூரத்துக்கு ஒரு மணித்தியாலம் பயணிக்கலாம் என்று எனக்கு ஆசை காட்டினார். ஆனாலும் நான் படகில் ஏறாத உறவினர்களோடு அங்கே இருந்து அப்பகுதியின் இயற்கை காட்சிகளை இரசித்தேன்.
ஒரு மணித்தியாலத்தின் பின்பு படகில் இருந்து உறவினர்கள் வந்ததும் கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை நோக்கிப் பயணித்தோம்.

சில நிமிடப்பயணங்களின் பின்பு கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை அடைந்தோம். காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே இந்த விருது பெற்ற வெப்பக்குளங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு குளங்களும் வெவ்வேறான வெப்ப நிலையில் இருந்தன.
இங்கு நான்கு 35ல் இருந்து 38 செல்சியஸ் டிகிரியில் அமைந்த பாறை குளங்கள் (Rock pools) இருக்கின்றன. 40ல் இருந்து 42 செல்சியஸ் வெப்பமான கந்தகக்குளங்கள் (Sulphur Pools) மூன்றும் இருக்கின்றன.36ல் இருந்து 37 செல்சியஸ் வெப்பமான Rainbow Pools இருக்கின்றன. ஆனால் 38 - 40 செல்சியஸ் வெப்பமுடைய மூன்று Hexagonal Pools குளங்களில் தான் பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிக்குளிப்பார்கள். 28 டிகிரி செல்சியஸில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வரையிலான இக்குளங்கள் எல்லாவற்றிலும் குளித்துப் பார்த்தேன். இங்கு மசாஜ்,facial போன்ற உதவிகளையும் பெறக்கூடியதாக இருந்தது.அத்துடன் நீந்துபவர்களுக்கும் இங்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது.


சில மணித்தியாலங்கள் கன்மர் ஸ்பிரிங்கில் குளித்து பொழுதைப் போக்கிய பின்பு சூடான உணவினை உண்டபின்பு கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.

No comments: