எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, September 29, 2010

நியூசிலாந்து 26 - உலகப் புகழ் பெற்ற மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் ஆரம்பம்

'TripAdvisor' என்ற அமைப்பின் கணிப்பின் படி 2008ம் ஆண்டிற்கான உலகத்தில் சுற்றுலா செல்லும் இடங்களில் முதல் இடத்தைப் பிடித்த இடம் மில்வேட் சவுண்ட். நியூசிலாந்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு மில்வேட் சவுண்டுக்குத் தான் செல்கிறார்கள். பிரபலமான எழுத்தாளரும் கவிஞருமான 'Rudyard Kipling' அவர்கள் 8வது உலக அதிசயமாக மில்வேட் சவுண்டினைச் சொல்லியிருக்கிறார். இந்த உலகப் புகழ் பெற்ற மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் செய்ய கப்பலில் ஏறச் சென்றேன்.
கப்பல் செல்லும் பாதையினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

Anita bay, Dale point பகுதியில் கடலுடன் நீர் சங்கமிக்கிறது.

மில்வேட் சவுண்டில் கப்பலில் ஏற முன்பு புகைப்படம் எடுத்தார்கள். விரும்பினால் பயண முடிவில் அப்படத்தைக் காசு கொடுத்து வாங்கலாம் என்று சொன்னார்கள். இயற்கைக்காட்சிகள் மிக்க மலைகளினால் சூழப்பட்ட நீர்ப்பரப்பில் கப்பல் பயணித்தது. நான் கப்பலின் மேல்தட்டில் இருந்து கொண்டே இயற்கை அழகினை இரசித்தேன். மலைகளில் இருந்து வரும் நீர்வீழ்ச்சிகளை பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. எங்களது பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலப் பயணமாக இருந்தது.


கீழே உள்ள படத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இன்னுமொரு கப்பல்


குளிரினால் உடல் நடுங்கியது. கப்பலின் 2வது தளத்தில் உணவகங்கள் இருந்தன. ஆனால் கப்பலின் மேல்த்தளத்தில் இருந்து மில்வேட் சவுண்டின் இயற்கை அழகினை இரசித்துக் கொண்டு இருந்ததினால் உணவகங்களுக்கு நான் செல்லவில்லை.
மலை உட்சியில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர்வீழ்ச்சிகள்


4 comments:

துளசி கோபால் said...

படங்கள் மறுபடியும் எனக்கு ஹோம்சிக்கை வரவழைக்குது.


அண்டர் க்ரவுண்ட் அப்சர்வேட்டரிக்குப் போகலையா?

துளசி கோபால் said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/2.html

நேரம் இருந்தால் பாருங்க.

Aravinthan said...

அண்டர் க்ரவுண்ட் அப்சர்வேட்டரிக்குப் போகலையா?
---------------------
சென்றிருக்கிறேன். வரும் பதிவுகளில் நீங்கள் வாசிக்கலாம்.

Aravinthan said...

துளசி கோபால் said...

http://thulasidhalam.blogspot.com/2008/06/2.html

நேரம் இருந்தால் பாருங்க.

--------------------------
உங்கள் பதிவினைப் பார்த்தேன். நன்றாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள். நான் 2005ல் தான் இங்கு பிரயாணம் செய்திருக்கிறேன். எனது அனுபவத்தினை யாழ் இணையத்தில் 2008ல் தான் எழுதியிருக்கிறேன். உடனே எழுதியிருக்காததினால் பலவற்றை( முக்கியமான வரலாறுகள்) மறந்து விட்டேன்.