எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, June 30, 2010

நியூசிலாந்து 5 - ஆர்தர்பாசில் இருந்து புனாகைகி வரை



தேனீர்க்கடையில் இருந்து கிறெமவுத்தை(Greymouth)நோக்கிப்பயணித்தேன்.

மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. வளைந்து செல்லும் பாதையின் அருகில் பள்ளத்தாக்குகள்.

அழகான இக்காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தேன். எனினும் எனது பார்வையில் கிறேஸ் சேர்ச்சில் இருந்து ஆர்தர்பாசை நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள இயற்கை காட்சியானது, ஆர்தர்பாசில் இருந்து கிறேமவுத்தை நோக்கிச் செல்லும் போது பார்க்கும் இயற்கை காட்சியை விட மிகவும் அழகாக இருந்தது.


மலை உச்சியில் இருந்து வரும் நீர்வீழ்ச்சி வீதியில் விழாமல், அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்.

ஆர்தர்பாசைக் கடந்ததும் முதலில் தென்பட்ட எரிபொருள் நிலையத்தில் வாகனத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றேன். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு கண்ட எரிபொருள் நிலையம் இது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எரிபொருளைப் பெறுவது நல்லது.

தொடர்ந்து பயணிக்கும் போது வானத்து முகில்களும் எமது அருகில் வந்து வந்து சென்றன.




மதியம் கிறெமவுத்தை அடைந்ததும் நேரம் இருப்பதினால் வடக்கு நோக்கி புனாகைகி(Punakaiki) நோக்கிப் பயணித்தேன்.கிறெமவுத்தில் இருந்து வடக்கே உள்ள Punakaiki நோக்கி பிரயாணம் செய்யும் போது கடலில் அழகான கற்பாறைகளைக் காணலாம். அவுஸ்திரெலியா விக்டோரியா மாநிலத்தில் உள்ள Great Ocean Roadல் பயணிக்கும் உணர்வை இங்கு உணரலாம். நான் இப்பதிவில் 2005ல் பார்த்த படங்களைத் தான் இணைத்து வருகிறேன். 2005ல் சென்ற போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. 2009ல் சென்ற போது வானம் மிகவும் அமைதியாக இருந்ததினால், இவ்விடத்தில் பயணிக்கும் போது 2005யை விட அழகாகத் தென்பட்டது.
2009ல் பார்த்தவற்றை எழுதும்போது அப்படங்களை இணைக்கிறேன்.



2 comments:

துளசி கோபால் said...

பூனாகைகியில் Pan cakes rocks ரொம்ப பிரபலம். தோசையைச்சுட்டு ஒன்னுமேலே ஒன்னு அடுக்கிவச்சதுபோல இருக்கும். கடல் தண்ணீர் டைட் அதிகமாகும் சமயம் ப்ளோ ஹோல்ஸ்ன்னு தண்ணீர் பாறையில் இருக்கும் துளைகள் வழியா பீறிடும்.சிலசமயம் நாலு மாடிக் கட்டிட உசரத்துக்குக்கூட.

மாசுபடாத இயற்கை எழில் இன்னும் மிச்சம் இருக்கு.

உங்க பதிவைத் தொடர்கிறேன்.

Aravinthan said...

தொடர்ந்து வாசித்து உங்களின் கருத்துக்களையும் , தகவல்களையும் தரும் உங்களுக்கு நன்றிகள் துளசி கோபால்