எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, September 29, 2008

வனுவாட்டு - பகுதி18 -அதிசயக்கல்

சமுத்திரத்துடன் ஆறு சந்திக்கும் இடத்துக்கு முன்பாக இருக்கும் ,ஆற்றில் நாங்கள் போகும் திசைக்கு வலப்பக்கத்தில் உள்ள Warieka என்ற கிராமத்தில் படகு சென்று நிக்க நாங்கள் எல்லோரும் படகை விட்டு அங்கே இறங்கினோம். அங்கே ஒலையினால் வேயப்பட்ட ஆடைகள் அணிந்த இரு பெண்களும் ஒரு ஆணும் எங்களை வர வேற்கக் காத்திருந்தார்கள்.
இறங்கியதும் அப்பெண்களில் ஒருவர் எங்களின் தலையில் இலைகளினால் வேயப்பட்ட வட்ட வடிவமான வலையத்தினை அணிவித்தார். அவ்வலையத்தில் செவ்வரத்தம் பூவும் இருந்தது. அதன்பிறகு குடிப்பதற்கு செவ்விளனீரை வெட்டி இளனீர் தந்தார்கள்.

பிறகு அருகில் உள்ள பசுபிக்கடலில் மீன்களுக்கு அவர்கள் உணவு வீச பல மீன்கள் அவ்வுணவை உண்டன.


அதன் பிறகு 59 கிலோகிராம் உள்ள ஒரு பெரிய கல்லினைத் தூக்கி கடலில் வீசச் சொன்னார்கள். மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரும் தூக்கவில்லை.

அவர்களில் இருவர் சேர்ந்து அக்கல்லைத் தூக்கி கடலில் வீசினார்கள்.


கடலில் விழுந்த அந்த பெரிய கல் கடலில் மிதந்தது.

அதே இனத்தினச் சேர்ந்த சிறு கற்களினை அக்கடலில் எறியும் போது அக்கற்கள் மிதக்கவில்லை. கடலில் மிதந்த அந்தப் பெரிய கல் ஆபூர்வ சத்தி வாய்ந்ததாக அவர்கள் சொன்னார்கள். 59 கிலோ நிறை உள்ள அந்தக்கல் சுவாசிக்கும் தன்மை உடையது என்றும் சொன்னார்கள்.
அதன்பிறகு நாங்கள் ஒன்றையடிப்பாதையினூடாக நடக்க, சில நிமிடங்களில் அங்கே நாங்கள் வந்த கூண்டுந்து(van) நின்றதைக் கண்டோம். வாகன ஒட்டி படகில் வரவில்லை. அவர் வேறு பாதையினால் அவ்விடத்துக்கு வந்தார். 59 கிலோ கல் அமைந்துள்ள மிகவும் பெரிய காணி அந்த வாகன ஒட்டியின் குடும்பத்தாருடையது என அறிந்தோம்.

2 comments:

Anonymous said...

கல் உண்மையில் ஒரு அதிசயம் தான்...

Aravinthan said...

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் தூயா