எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, July 28, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி6 மேல்(MELE ) நீர்வீழ்ச்சி


போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு மேல் (MELE) என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MELE CASCADES]வனுவாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். வழிகாட்டியின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம். சில இடங்களில் பெரிய வழுக்கக்கூடிய கற்களின் மேல் அவதானமாகச் சென்று நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். அச்சமயத்தில் கூட வரும் வழிகாட்டி கற்களின் மேலே ஏற உதவி செய்வார்.




நடந்து சென்று ஒரு உயரமான இடத்தை அடைந்தோம். அவ்விடத்தில் இருந்து பார்க்கும் போது கடலினுள் உள்ள ஒரு தீவு ஒன்று தெரிந்தது. கிழே உள்ள படத்தில் தெரியும் இத்தீவுதான் HIDEAWAY ISLAND.உலகில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு தபால் நிலையம்(The world's first (and only) underwater post office )இத்தீவில் உள்ளது. Efate தீவுக்கு மிக அருகில் உள்ள இத்தீவில் உள்ள இத்தபால் நிலையத்துக்கு நீச்சல் தெரிந்தவர்கள் நீருக்குள் நீந்தி நீர் உட்புகமுடியாத தபால்களினை(waterproof postcards) இத்தபால் நிலையத்தினுடாக அனுப்பலாம்.

இத்தீவினைப் பார்த்தபின்பு நீர்வீழ்ச்சியை நோக்கி தொடர்ந்து மரம் செடிகளினூடாக நடந்தோம்.




சில நிமிடப் பயணங்களின் பின் நீர்வீழ்ச்சிகளை அடைந்தோம்.நான் 3 நீர் வீழ்ச்சிகளில் குளித்தேன். அதில் ஒரு நீர் வீழ்ச்சியில் மிகவும் சிறிய மீன்கள் இருந்தன.






நீர்வீழ்ச்சியில் குளித்தவுடன் மீண்டும் திரும்பி நடந்து பயணம் ஆரம்பித்த இடத்துக்கு அருகில் உள்ள சிறு கொட்டிலை அடைந்தோம். அங்கே பெரிய தட்டில், வெட்டிய பழங்களினை வாழை இலையினால் மூடி வைத்திருந்தார்கள். குளிர்பானமும் குடிக்கத்தந்தார்கள். தோடம்பழ, மாம்பழக் குளிர்பானங்கள் (அவுஸ்திரெலியா, இலங்கைக்குளிர் பானங்களினை விட ) வித்தியாசமான உருசியுடன் சுவை கூடியதாக இருந்தன.பழங்களும் உருசியாக இருந்தன. ஆனால் அக்கொட்டிலில் இருக்கும் போது பறந்த ஈக்களின் தொல்லைதான் தாங்கமுடியாமல் இருந்தது. வனுவாட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு அவுஸ்திரெலியா அரசாங்கம் மலேரியாத்தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு செல்லச் சொல்லியிருந்தார்கள். நான் மலேரியா குளிசை மட்டும் தான் 2 நாள் உபயோகித்தேன். பிறகு உபயோகிக்கவில்லை. ஆனால் நான் வனுவாட்டில் ஒரு நுளம்பினையும் காணவில்லை.

5 comments:

Anonymous said...

உங்களோடு வேறு தமிழர்களும் வந்தார்களா? வேறு எந்த எந்த நாட்டவர்கள் வந்தார்கள்?

Aravinthan said...

பல்வேறு விடுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட சிறிய வாகனத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்களுக்கு சென்றேன். பெரும்பாலான பயணிகள் அவுஸ்திரெலியா நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள். சில இடங்களில் பிஜி நாட்டவர்களையும் கண்டேன்.

onewithnature said...

Anna,

Great Entry (I still have to figure out how to write in Tamil????)

Brentha

Aravinthan said...

நன்றிகள் பிருந்தா

Aravinthan said...

என்னுடனும் சில தமிழர்கள்(சொந்தங்கள்) வனு-அற்றுக்கு வந்தார்கள் தூயா.