எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, August 15, 2013

நியூசிலாந்து - 65 அழகிய கைக்கோரா நகர்

கைக்கோராவில் உள்ள குன்றின் மேல் ஏறி உயரமான இடத்தில் இருந்து சில தூரம் நடந்து சென்றால் கலங்கரை விளக்கமொன்றினைக்(Light House) காணலாம்.
அந்த உயரமான இடத்தில் இருந்து பார்க்கும்போது கைக்கோரா மிகவும் அழகாக இருந்தது.
உயரமான இடத்தில் இருந்து அழகிய காட்சிகளைக் கண்டு இரசித்தபின்பு மதிய உணவினை உண்ண மீண்டும் கைக்கோரா நகரை நோக்கிப் பயணித்தோம்.
தாய்லாந்து நாட்டு உணவகம் ஒன்றில் மதிய உணவினை உண்டபின்பு அன்று இரவு தங்கும் பிக்டன் நகரை நோக்கிப் பயணித்தோம். கைக்கோராவில் இருந்து பெலிங்கெம்(Blenheim) செல்ல ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் தேவை.
பெலிங்கெமில் இருந்து பிக்டனுக்கு செல்ல 30 நிமிடங்கள் தேவை.

3 comments:

துளசி கோபால் said...

கைக்கோராவில் அந்த தகவல் நிலையத்துக்கு அருகில் ஒரு குகை இருக்கே. அதைப் பார்க்கலையா?

லைம் ஸ்டோன் கேவ்.

ஆமாம்.... எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

நலம்தானே?

இராஜராஜேஸ்வரி said...

கைக்கோரா கவின் மிகு காட்சிகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

Aravinthan said...

நேரம் கிடைக்காததினால் குகையினைப் பார்க்கவில்லை துளசி கோபால். அத்துடன் சிட்னியில் இருந்து சில மணித்தியாலப் பயணமுடிவில் இருக்கும் ஜெனோலன் குகைகளுக்கு அடிக்கடி பயணித்திருக்கிறேன்.

நான் கணனித்துறையில் வேலை பார்க்கிறேன். எனக்கு தற்பொழுது வேலையில் அதிக நேரம் செலவிடுவதினால் பதிவு எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.