எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Tuesday, October 30, 2012

நியூசிலாந்து 59- கடல் சிங்கங்களும்(fur seals) அல்பட்ரொஸ்(Albatross) பறவைகளும்

உலகில் இருக்கும் பென்குயின்களில் மிகவும் சிறியவையான நீல நிறப் பென்குயின்களையும், மஞ்சள் கண் நிறமுடைய பென்குயின்களையும் பார்த்தபின்பு கடல் சிங்கங்களும்(fur seals) அதன் குட்டிகளும் இருக்கும் இடத்துக்கு சென்றோம். பாறைகளின் மேலேயும் கீழேயும் அவை இருந்தன.கயிற்றினால் கட்டப்பட்ட வேலிக்கு அப்பால் அவை இருந்தன.
சில கடல் சிங்கங்கள், இயற்கையான நீர்நிலைகளில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தன.
சில ஒடுக்கமான பாறைகளுக்கு பின்னால் உள்ள மறைவான இடங்களில் மிகவும் பெரிய கடல் சிங்கங்கள் இருந்தன. அவை இருக்கும் இடத்துக்கு சென்றால் அவை சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் என்பதினால் அவ்விடங்களுக்கு செல்வது நல்லதல்ல என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். அவ்விடங்களில் கடல் சிங்கங்கள் தங்களது சோடி நாய்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும். காலை 11:30 மணிக்கு ஆரம்பமான இச்சுற்றுலா மதியம் 12:45 மணியளவில் முடிவடைந்தது. அங்கே இருக்கும் உணவகம் ஒன்றில் மதிய உணவினை உண்டபின்பு கிறைச்சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம். அன்று இரவு நாங்கள் தங்க இருக்கும் இடமான கிறைச்சேர்ச்சிற்கு செல்ல கிட்டத்தட்ட 6 மணித்தியாலம் பயணம் செய்யவேணும் என்றதினால் உடனே பயணித்தோம்.
'Natures Wonders'(இயற்கை அதிசங்கள்)என்ற இச்சுற்றுலா ஆரம்பிக்கும் இடமான ஒட்டாகோ தீவகற்பத்தில் வடகிழக்கு மூலையில் உள்ள 'Taiaroa Head' க்கு அருகில் இருக்கும் 'Albatross colony' என்ற கடல்பறவைகளின் குடியேற்றப்பகுதி இருக்கிறது.
இங்கு இப்பறவைகள்(Albatross) பற்றிய சுற்றுலாக்களையும் நடாத்துகிறார்கள். இப்பறவைகள் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து நவம்பர் மாதம் நடுப்பகுதிவரையிலான காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இக்காலங்களில் இவைகள் இருக்கும் இக்குடியேற்றப்பகுதிகளில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது. மக்கள் சென்றால் இவைகளின் இனப்பெருக்கத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதினால் தான் இத்தடை இருக்கிறது. இதனால் இக்காலங்களில் இப்பகுதிகளில் இப்பறவைகள் பற்றிய சுற்றுலாக்கள் நடைபெறுவதில்லை. நாங்கள் இப்பகுதிக்கு அருகில் சென்ற போது நவம்பர் மாதம் முதலாவது வாரம் என்பதினால் இங்கு சுற்றுலா நடைபெறவில்லை.

4 comments:

Unknown said...

nice place...i'd like to visit this place

Aravinthan said...

Vijay Meme said...

nice place...i'd like to visit this place
----------------

உங்களின் கருத்துக்கு நன்றிகள்

துளசி கோபால் said...

அட ராமா.......

சிங்கத்தை இப்படி நாய் ஆக்கலாமோ!!!!!!

இது ஸீலயன் ஸீல் வகைகள். கடல்சிங்கம் என்றுதான் நாங்க சொல்வோம்.

Aravinthan said...


கடல் நாய், கடல் சிங்கம் பற்றிய சில தகவல்கள்
Sealions and fur seals belong to the family Otariidae, or 'eared seals', so called because they have external ear-flaps. They are able to rotate their hind flippers forwards to help them walk on land, and the males have a thickened area of fur about the neck (hence the allusion to lions). When swimming, they propel themselves using their front flippers.

Seals belong to the family Phocidae, or 'true seals'. They are more adapted to an aquatic lifestyle than the eared seals. They lack external ear-flaps, and cannot bring their hind flippers beneath them for movement on land - instead, they must heave themselves along with their front flippers. When swimming, they propel themselves using the hind flippers.

There are several species in each family. The one best known for eating penguins is the leopard seal, which is a true seal.